இலங்கை பௌத்தர்களுக்குரிய நாடு அல்ல இது இது சைவத் தமிழ் நாடு ஞானசார தேரரின் கூச்சலுக்கு பதிலடி! சீ.வி

இலங்கை சிங்கள பௌத்த நாடு. இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம். இல்லையெனில், தங்களது உடமைகளுடன் வேறு நாடுகளுக்குச் செல்லலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.ஞானசார தேரரின் இந்த கருத்துத் தொடர்பில் ரெலோ அமைப்பு இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குடியகல்வு அதிகாரங்கள் தேரருக்கு எப்போது கிடைத்தது என கேள்வியெழுப்பியுள்ள ரெலோ அமைப்பு, இவ்வாறான இனவாதக் கூச்சல்களால் தமிழர்களை அச்சுறுத்திவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஞானசார தேரர் வெறும் முகமூடி மாத்திரமே எனவும், அந்த முகமூடியின் பின்னால் வலிமைகொண்ட இனவெறிச் சக்திகள் ஒளிந்து நின்று செயற்பட்டு வருகின்றன என்பதையும் நாமறிவோம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதே சந்தர்ப்பத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இது தொடர்பில் சஜித்தை தொடர்புப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்அவருக்கு ஒரு கெட்டியான பௌத்த பின்னணி இருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் ஒரு சில விடயங்கள் அவர் தமிழர் மீது தன்னுறுதியில்லாத மனோநிலையைக் கொள்ளக் கூடியவாறு அமைந்திருக்கலாம்.
அவரின் தந்தையார் தமிழ்ப் போராளிகளின் வன்முறைக்கு இலக்கானார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை ஒரு காரணம்.அடுத்தது நிருவனமயப்படுத்தப்பட்ட பௌத்தத்திற்கும் புத்தரின் போதனைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை அவர் உணர்ந்து கொண்டுள்ளாரோ தெரியவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவரின் ‘இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு’ என்ற அதி தீவிர சிந்தனை தடையாக இருக்கலாம்.
ஆனால் அவர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு அல்ல. புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாடு சைவத் தமிழ் நாடாக இருந்தது.
பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதே தமிழ் இந்துக்கள் மத்தியில் தான். மேலும் சிங்கள மொழியானது நடைமுறைக்கு வந்தது கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே.
இன்று 2000 ஆண்டுகளுக்கு மேலான தொல்பொருள் சார்ந்த பௌத்த எச்சங்கள் என்று கூறப்படுபவை தமிழ் பௌத்தர்கள் கால எச்சங்கள்.
இன்று நாட்டின் 75 சதவிகிதமானவர்கள் சிங்கள் பௌத்தர்கள் என்பது உண்மையே. ஆனால் வட கிழக்கின் 85 சதவிகிதத்திலும் அதிகமானவர்கள் தமிழ்ப் பேசும் மக்களே.
எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடு.
வடக்கில் இந்து சமயமானது ஆதிகாலந் தொட்டு கோலோச்சி வந்துள்ளது.அது மற்றைய மதங்கள் யாவற்றையும் மதிக்கும் ஒரு சமயம்.
‘உண்மை ஒன்று; அதை ஞானிகள் பல நாமங்களால் குறிப்பிடுகின்றார்கள்’ என்பதே இந்து மக்களின் கருத்து வெளிப்பாடு.அதனால் தான் வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கு பிரிக்கப்படாத நாட்டினுள் சுயாட்சியைக் கோருகின்றார்கள்.
‘தேசிய அபிமானிகள்’ என்ற வகையில் ஆட்சி ஓச்சியவர்களில் இருந்தும் வித்தியாசமான ஒருவராக சஜித் சிறந்து விளங்க முடியும்.
இதுவரையில் ஆட்சி ஓச்சியவர்கள் அறிவுடைமையையும் உணர்வுடைமையையும் வெளிக்காட்ட முடியாதவர்களாகவே இருந்தார்கள்.
தன்னால் பின்னப்பட்ட மேற்கூறப்பட்ட வலையில் இருந்து சஜித் விடுபட்டாரானால் எல்லா மக்களும் பாராட்டும் அதி சிறந்த ஜனாதிபதியாக வரக்கூடிய தகைமைகள் கொண்டவர்; அவர் என்பது எனது கருத்து. என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply