சீன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 19 பேர் பலி

சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ளது நிங்காய் கவுண்டி. இங்குள்ள தொழிற்பூங்காவில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதும் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். ஆனால், தீ வேகமாகப் பரவியதால், சிலர் தீயில் சிக்கிக் கொண்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 3 பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சீனாவில் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடர்ந்து விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply