மலையக மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவேன் : கோட்டாபய ராஜபக்ஷ

எதிர்வரும் அரசாங்கத்தில் மலையக மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் உட்பட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ் மக்களுடன் நட்பாக இல்லை எனும் குற்றச்சாட்டு எதிர் தரப்பினால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் சமாதானமாக வாழக்கூடிய சூழல் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் தான் நன்கு அறிவதாகவும் மலையக மக்களும் வாழக்கூடிய சூழலை உருவாக்க தனது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply