குஜராத்தில் இன்று தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தின் வடக்கேயுள்ள பனஸ்கந்தா மாவட்டத்துக்குட்பட்ட அம்பாஜி-டன்ட்டா சாலை வழியாக சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான ஒரு சொகுசு பேருந்து திரிஷுல்யா காட் என்ற மலைப்பாங்கான இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இன்று மாலை நடந்த இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 50 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த கோர விபத்து தொடர்பான தகவலறிந்த பிரதமர் மோடி அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply