எவன்கார்ட் தொடர்பில் விசாரணை செய்தது நாம் இல்லை : அமைச்சர் சம்பிக்க ரணவக்க

எவன்கார்ட் தொடர்பில் விசாரணை செய்தது நாம் இல்லை எனவும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஊடாவே விசாரணைகள் இடம்பெற்றதாகவும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தியசரு உயனவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் பரிந்துரைத்தது, கடந்த தினத்தில் எவன்கார்ட் விசாரணைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சுஹந்த கம்லத்தின் கீழ் பணி புரிந்த வசந்த நவரத்ன பண்டார என்ற நபரே என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கப்பலில் ஆயுதங்களை வைத்திருந்ததன் ஊடாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நன்கு அறிந்த நிலையில் குற்றச் செயலுக்காக ஆயுதங்களை வைத்திருந்தல், ஆயுத இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கு முறையான உரிமம் இன்றி துப்பாக்கி கட்டளைச்சட்டம் மற்றும் வெடிப்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பின்னர் இவை தொடர்பில் தெரிந்தே ஆதரவு வழங்கிய சம்பவம் தொடர்பில் 5 பேரை உடனடியாக கைது செய்து விசாரிக்குமாறு அவர் தெரிவித்ததாக சம்பிக்க தெரிவித்தார்.
அதில் ஒருவர் தான் கோட்டாபய ராஜபக்ஷ, மற்றையவர்கள்தான் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர், எவன்கார்ட் நிறுவனத்தின் பிரதானி , பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் பிரதானி என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply