சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று

இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த சர்வதேச அல்கஹோல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என பிரதி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

சட்டவிரோதமாக மதுபானத்தையும், சிகரட்டையும் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக அல்கஹோல் எதிர்ப்பு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. சென்ற வருடங்களில் நாம் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் போல் இம்முறையும் சில்லறை மது விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவிட்டுள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply