சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (05) இடம்பெறவுள்ளது. கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இரவு ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இன்று (05) இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply