ஞாசாரர் காவியை கழற்றி விட்டு சண்டித்தனம் காட்டினால் தக்க பதிலடி கொடுப்போம் :ரெலோ தலைவர் செல்வம்

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து, தென்னிலங்கையிலிருந்து வருகைதந்த ஞானசார தேரரும் அவரது குழுவினரும் முல்லைத்தீவு குருகந்த ரஜமகா விகாரையின் தேரரின் சடலத்தை தகனம் செய்தமைக்காக கைது செய்ய வலியுறுத்தி இன்று யாழ்.நகரில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் நிறைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்டினால், நாங்களும் அதற்கான பதிலைக் கொடுப்போம் என சவால் விடுத்துள்ளார்.
ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், தமிழ் மக்கள் அனைவரும் அநாதரவாக நிற்பார்கள் என சிங்கள பௌத்த பிக்குகள் எண்ணுவது போல் உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அகிம்சைப் போராட்டம் என்பது தமிழ் மக்கள் இலங்கைக்கு சொல்லித் தந்த வரலாறு அல்ல. ஆயுதப் போராட்டத்தின் மூலம் எமது மக்கள் தென்னிலங்கையை வாய் திறக்காத வண்ணம் வைத்திருந்தார்கள்” என தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,எம்மைப் பொறுத்தமட்டில் காவி உடை புனிதமானது. காவி உடையை கழற்றிவிட்டு ஞானசார தேரர் சண்டித்தனத்தைக் காட்ட வேண்டும்.
எமது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் காவி உடை அணிவது புனிதமானது. ஒரு சில பௌத்த மதகுருமார் காவி உடை அணிந்து தமிழ் இனத்தை மிக மோசமாக நடாத்த எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் ஆத்திரம் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply