ஆர்மேனியாவில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி

ஆர்மேனியா நாட்டில் உள்ள வனட்ஸார் நகரில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11.55 மணிக்கு, அங்குள்ள வீடுகளில் மர்ம நபர் ஒருவர் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது அந்தப் பகுதி போர்க்களம் போல காணப்பட்டது. மக்கள் எல்லோரும் பதற்றத்தின் பிடியில் இருந்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து 3 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும், 5 பேர் படுகாயம் அடைந்து விழுந்து கிடந்ததையும் போலீசார் கண்டனர்.

அவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அதே நகரத்தை சேர்ந்த 40 வயதான ஒருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவத்துக்கான பின்னணி என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply