போட்டிக் களத்தில் உள்ள 35 வேட்பாளர்கள் விபரம்!

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்திய 6 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில், ஆறு பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் விவரம் வருமாறு:-
- சஜித் பிரேமதாஸ – ஐக்கிய தேசியக் கட்சி
- கோட்டாபய ராஜபக்ச – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி
- அநுரகுமார திஸாநாயக்க – தேசிய மக்கள் சக்தி
- றொகான் பல்லேவத்த – ஜாதிக சங்வர்த்தன முன்னணி
- மில்றோய் பெர்னான்டோ – சுயேட்சை
- ஜெனரல் மகேஸ் சேனநாயக்க – தேசிய மக்கள் இயக்கம்
- சிறிபால அமரசிங்க – சுயேட்சை
- சரத் மனமேந்திர – நவ சிங்கள உறுமய
- சமரவீர வீரவன்னி – சுயேட்சை
- சமன் பிரசன்ன பெரேரா – எமது மக்கள் சக்தி கட்சி
- அனுருத்த பொல்கம்பொல – சுயேட்சை
- ஏ.எஸ்.பி. லியனகே – ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி
- ஜயந்த கேதாகொட – சுயேட்சை
- துமிந்த நாகமுவ – முன்னிலை சோசலிசக் கட்சி
- அஜந்தா பெரெரா – ஸ்ரீலங்கா சோசலிசக் கட்சி
- சமன்சிறி ஹேரத் – சுயேட்சை
- அசோக வடிகமங்காவ – சுயேட்சை
- ஆரியவன்ச திஸாநாயக்க – ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
- வஜிரபானி விஜேசிறிவர்த்தன – சோசலிச சமத்துவக் கட்சி
- பத்தேகமகே நந்திமித்ர – நவசமசமாஜக் கட்சி
- வண. அபரகே புண்ணானந்த தேரர் – சுயேட்சை
- பியசிறி விஜேநாயக்க – சுயேட்சை
- அனுர டி சொய்சா – ஜனநாயக தேசிய இயக்கம்
- ரஜீவ விஜேசிங்க – சுயேட்சை
- வண. பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் – ஜனசத பெரமுன
- இலியாஸ் இத்ரூஸ் முகமட் – சுயேட்சை
- அஜந்த டி சொய்சா – ருகுணு மக்கள் முன்னணி
- விஜித குமார கீர்த்திரத்ன – சுயேட்சை
- எம்.கே.சிவாஜிலிங்கம் – சுயேட்சை
- எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – சுயேட்சை
- பிரியந்த எதிரிசிங்க – ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு சவிதானய
- நாமல் ராஜபக்ச – தேசியங்களின் ஒற்றுமை இயக்கம்
- அஹமட் ஹசன் முகமட் அலவி – சுயேட்சை
- குணபால திஸ்ஸகுட்டியாராச்சி – சுயேட்சை
- சுப்ரமணியம் குணரத்தினம் – எமது தேசிய முன்னணி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply