பதவியேற்றதும் பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படுவேன்: கோட்டாபய

தான் பதவிக்கு வந்தவுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான பாதுகாப்புத் திட்டத்தை மீண்டும் செயற்படுத்தி பாதுகாப்பான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (21) பெலியத்த பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் நடாத்தப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன. நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இந்த அரசாங்மே காரணம். இந்த அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் விளக்கமொன்று இருக்கவில்லை. தேசிய பாதுகாப்பை உடைக்கும் அம்சங்களையே இந்த அரசாங்கம் முன்னெடுத்தது.

இராணுவ அதிகாரிகளை சிறைப்படுத்தினர். சர்வதேச நீதிமன்றத்தில் இராணுவத்தினரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். இராணுவ வீரர்களின் மனநிலையை உடைத்துவிட்டனர். நாம் ஏட்படுத்தியிருந்த பாதுகாப்பு திட்டங்களை நீக்கிவிட்டனர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply