இந்த தேர்தலை எப்படிப் பார்க்க வேண்டும் : ரிஷாத் பதியுதீன்

சிறுபான்மை மக்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோமேயானால் சஜித் பிரேமதாச பாரிய வெற்றியைப் பெறுவார் எனவும், நியாயத்துக்கும் அநியாயத்துக்குமான இந்தத் தேர்தலில் நியாயம் வேண்டு, நீதி வாழவேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் எமது மதஸ்தலங்களை நொருக்கியவர்கள், உரிமைகளைப் பறித்தெடுத்தவர்கள், வியாபார ஸ்தாபனங்களை நாசப்படுத்தியவர்கள், நிம்மதியைக் கெடுத்தவர்கள் அனைவரும் கோத்தபாயவுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளனர். இவர்களின் கனவுகளைச் சிதைப்பதற்காகவே சிறுபான்மை தலைவர்களாகிய நாம் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம்.
இனவாதிகளின் சதிகளை முறியடிப்பதற்கும் தடுப்பதற்கும் நீங்கள் எம்முடன் கைகோர்த்து சஜித்தை வெல்லவையுங்கள். இனவாதிகள் தமது அணிதான் வெற்றிபெறுமென்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். நமது சமூகத்தை அழிப்பதற்கு அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டு இப்போது வாக்குக்கேட்டு வருகின்றார்கள்.
நாங்கள் ஊர் ஊராக, வீடு வீடாக வந்து வாக்குக் கேட்கமுடியாது போய்விட்டாலும் நீங்கள் உணர்ந்து வாக்களியுங்கள். சஜித் பிரேமதாசவை வெல்லவைப்பதன் மூலம் நமது எதிர்காலம் நமது மண்ணின் எதிர்காலம் சிறப்படையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அமைய வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்று மன்னாரில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply