எஸ்.பீ. திஸாநாயக்க அமைச்சர்கள் குறித்து இரகசிய தகவல்

அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் தங்களது காலத்தில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஆவணங்களை அமைச்சுக்களிலிருந்து இரகசியமாக வெளியேற்றி வருவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆவணங்களைக் கடத்தி மறைத்ததனால் எந்தவித பிரயோசனமும் இல்லையெனவும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து கொண்டே இவ்வாறு ஆவணங்களை மறைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை யாழ்ப்பாணத்தின் வாக்குகளை மாத்திரமே இந்த அரசாங்கம் நம்பிக்கொண்டிருப்பதாகவும் அந்த வாக்குகளும் இம்முறை ஒழுங்காக இந்த அரசாங்கத்துக்கு கிடைக்காது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply