தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழும் சூழலை உருவாக்குவோம் : எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ்

தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழக் கூடிய சூழலை நாம் உருவாக்குவோம். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போன்று நாம் தமிழ் மக்களை ஏமாற்றப் போவதில்லை அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட மூன்று மொழிகளிலும் மூன்று விதமாக விடயங்களை முன்வைத்துள்ளனர் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரக் கூட்டம் இன்று 10-11-2019 பிற்பகல் கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தில் 4000 ஆயிரம் மில்லியன்களை பெற்றுள்ளனர்.
ஆனால் என்ன செய்தனர்? கிளிநொச்சியில் எங்களுடைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியை விட சொல்லுமளவுக்கு எந்த அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது.
சஜித் ஏமாற்றுகிறார். இதற்குள் இணைந்துகொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் கூட்டு களவானிகளாக உள்ளனர் எனத் தெரிவித்த அவர்.
வரும் 18 ஆம் திகதி கோட்டாபாய ராஜபக்ஸ விமான டிக்கட் பெற்றுள்ளார் என பொய்யான பரப்புரையை மேற்கொண்டுள்ளனர். அவர் ஜனாதிபதி மாளிகைக்கு செல்வதற்கான டிக்கட்டையே பெற்றுளள்ளார். அவர் அமெரிக்க பிரஜை என அமெரிக்காவிலும், இலஙகையிலும் வழக்குத் தொடுத்தனர் அவை அனைத்திலும் தோல்வியே கண்டனர் எனக்குறிப்பிட்ட அவர் நாம் மீண்டும் ஜனாதிபதியாக வந்தால் எங்களுடைய காலத்தில் போன்று அபிவிருத்திகளை கொண்டுவருவோம்.
முன்னாள் போராளிகளுக்கு அரச வேலைவாய்ப்பு, மாற்றுவலுவுள்ளோர்கள் பெண்த தலைமைத்துவ குடும்பங்கள் மேம்பாடு, அத்தோடு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பலப்படுத்த்பபட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் விவசாயிகளுக்கு இலவசமான உரம், உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு போன்ற மக்களின் அவசிய தேவைகள் நிறைவேற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இக் கூட்டத்தில் எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சி தலைவர் தவராசா மற்றும் பெருமளவான பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply