வங்காளதேசத்தில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல் : 16 பேர் பலி

வங்காளதேசத்தில் தெற்கு துறைமுக நகரமான சிட்டாகாங் சென்று கொண்டிருந்த ரெயிலும் தலைநகர் தாகாவிற்கு சென்று கொண்டிருந்த ரெயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தாகாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பிரம்மன்பாரியா மாவட்ட பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ரெயில் சென்று கொண்டிருந்த போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ரெயில்களின் சில பெட்டிகள் பலத்த சேதமடைந்தன.
இந்த விபத்தில் 16 பயணிகள் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply