நடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள். திரைப்படங்களில் நடித்து வருவாயை ஈட்டும் வேலையை மட்டும்தான் நடிகர்கள் பார்க்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் உள்ளன என்பதுகூட நடிகர்களுக்குத் தெரியாது. மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக நடிகர்கள் காட்டிக்கொள்கிறார்கள்.

அரசியல் பற்றி நடிகர் கமல் ஹாசனுக்கு என்ன தெரியும்? இடைத் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாதது ஏன்?

தொண்டர்களாவது தனது படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் கமல் நடித்துக்கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றது? தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் நிலைமைதான் நடிகர்களுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply