ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை : சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும், முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறியது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது. அத்துடன் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply