அரச நிறுவனங்களிலுள்ள ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை நீக்க உத்தரவு

சகல அரச நிறுவனங்களிலும் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் புகைப்படங்களை நீக்கிவிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்குப் பகரமாக அரச இலச்சினையைப் பிரதியீடு செய்யுமாறும் ஜனாதிபதி சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த நாட்டின் அரச தலைவர் ஒருவர், அரச இலச்சினைக்கு முதலிடம் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளமை இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply