இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் பாகிஸ்தான் பயணம்

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைப்போல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கோத்தபய ராஜபக்சேவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததுடன், கூடிய விரைவில் வசதியான ஒரு நாளில் பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார்.
இதை கோத்தபய ராஜபக்சே ஏற்றுள்ளார். அதன்படி விரைவில் அவர் பாகிஸ்தான் செல்ல இருப்பதாக கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமர் மோடியும், அவரை இந்தியாவுக்கு அரசு பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று வருகிற 29-ந்தேதி கோத்தபய ராஜபக்சே இந்தியா வர உள்ளார். அதிபராக பதவியேற்றபின் கோத்தபய மேற்கொள்ளும் முதல் அரசு பயணம் இதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply