இலங்கைத் தமிழர்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறது திமுக : அமைச்சர் ஜெயக்குமார்தாக்கு

டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. இரட்டை வேடம் போடும் திமுக அரசியலுக்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறது. இலங்கை தமிழர்களை ஏமாற்ற திமுக போடும் நாடகத்தை மக்கள் பரிந்துகொள்வார்கள்.
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் நீதிமன்ற நேரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வீணடிக்கிறார். தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கேட்டு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply