வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ராஜித

நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். சிகிச்சைகள் முடிவடைந்து அவர் நேற்று இரவு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply