ரஷியாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானை

ரஷியாவின் உள்ள இத்தாலிய சர்க்கஸ் நிறுவனத்திற்கு சொந்தமானவை கார்லா, ரன்னி யானைகள். சம்பவத்தன்று ரஷியாவின் யாக்டெரின்பர்க் நகரில் இந்நிறுவனம் சர்க்கஸ் கண்காட்சி நடத்தியது.
அதன் பின்னர் மற்றொரு நகரில் நடைபெற உள்ள சர்க்கஸ் கண்காட்சிக்கு செல்வதற்காக கார்லா, ரன்னி யானைகளை சர்க்கஸ் ஊழியர்கள் லாரிகளில் ஏற்ற முயன்றனர். ஆனால் யானைகள் வண்டியில் ஏற மறுத்தன. ஊழியர்களின் சொல் கேளாமல் கார்லா என்ற பெண் யானை சாலைக்கு சென்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையில் உள்ள பனியில் முன்னங்கால்களை மடக்கி உட்கார்ந்த யானை பின்னர் புரண்டு விளையாடியது. இதை பலரும் வீடியோ எடுத்தனர். சில மணித்துளிகள் யானைகள் விளையாடிய பின்னர் ஊழியர்கள் அவற்றை வண்டியில் ஏற்றினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply