சீன பயணிகளை கண்காணிக்க புதிய மென்பொருள்

இலங்கைக்குள் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனாவில் இருந்து வருகை தரும் பயணிகள் புதிய வகை மென்பொருள் சாதனத்தை பயன்படுத்தி கண்காணிக்கப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளாளர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரம், மனித நலன் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் நேற்று (30) இடம்பெற்ற போதே சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
ICTA நிறுவனத்தால் இந்த மென்பொருள் சாதனம் இரண்டு நாட்களில் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர் இந்த மென்பொருளின் மூலம் பயணி ஒருவர் தரித்து நிற்கும் இடம் மற்றும் அவர் தொடர்பான சகல தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply