இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானியாவில் 7 வருட சிறைத்தண்டனை

அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் ஊடாக பல மில்லியன் அமெரிக்கா டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கையில் பிறந்த பிரித்தானியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மைக்கல் கினானே (41 வயது) என்பவருக்கே பிரித்தானியாவின் கர்னார்போன் கிரவுன் நீதிமன்றத்தின் ஊடாக 7 வருடங்களும் 8 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள்து.
கடந்த 2018 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் திட்டம் மூலம் 8 மில்லியன் டொலர் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டதனாலும் , அவர் மீது, பணச்சலவை உள்ளிட்ட மேலும் சில குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாலும்
குறித்த குற்றங்களை குற்றவாளி ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் நேற்று (04) குறித்த நபருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply