27 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 27 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவைத் தேவையின் அடிப்படையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதால் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள் இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேரும், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 06 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு மேலதிகமாக 12 பொலிஸ் பரிசோதகர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply