ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து : 2 பேர் பலி

ரஷியாவின் கைடன் தீபகற்பத்தில் இருந்து சபேட்டா துறைமுகம் நோக்கி, எம்ஐ8 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் ஹெலிகாப்டர் ஊழியர்கள் 3 பேர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 10 பேர் பயணம் செய்தனர்.
சபேட்டா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கீழே விழுந்தது. பனிபடர்ந்த பகுதியில் தலைகீழாக விழுந்ததால் ஹெலிகாப்டரின் முன்பகுதி சேதமடைந்ததுடன், பனியில் சிக்கியது.
மீட்புக் குழுவினர் வருவதற்குள் பைலட், துணை பைலட் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply