காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் பலி : மெக்சிகோவில் சோகம்

மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் வசித்துவந்தனர்.
இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் அனைவரும் காப்பக கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த முயற்சியில் பல குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த தீவிபத்தில் சிக்கி 15 சிறுவர்கள் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் பரிதாபகாக உயிரிழந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply