மின் தடை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தீர்வு

Tuesday, February 18th, 2025 at 13:04 (SLT)

கடந்த 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக ஏற்பட்ட மின் தடை மற்றும் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான குறுகியகால மற்றும் நீண்ட கால தீர்வுகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது : ரவி கருணாநாயக்க

Tuesday, February 18th, 2025 at 7:52 (SLT)

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என்பது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தல் : நாமல் ராஜபக்ஷ

Tuesday, February 18th, 2025 at 7:48 (SLT)

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடு அரசாங்கத்துக்கு அழகல்ல, தேர்தலை பிற்போடும் பாவச்செயலுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்களும் உள்ளோம். இருப்பினும் தேர்தல் நடவடிக்கைகள் சாதாரண தர பரீட்சைக்கு இடையூறாக அமைய கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தமிழர் பகுதியில் கோர விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி மற்றொருவர் காயம்

Tuesday, February 18th, 2025 at 7:43 (SLT)

வவுனியா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று (17.2.2025) மாலை வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த நிமல் வயது 35 என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் : 18 பேர் படுகாயம்

Tuesday, February 18th, 2025 at 7:35 (SLT)

கனடா – டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வரையறுக்கப்பட்ட வரி நிதியை விவேகமாகவும் பொறுப்புடனும் நிர்வகிப்பதே எங்கள் நோக்கம்:ஜனாதிபதி

Monday, February 17th, 2025 at 12:34 (SLT)

ஜூலை முதல் மூத்த குடிமக்கள் வட்டி மானியத்துக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நிவாரணத் தொகையை உயர்த்தியுள்ளோம் என் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு

Monday, February 17th, 2025 at 12:26 (SLT)

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்புத்துறைமுகத்திற்கு வந்துள்ள வெளிநாட்டு போர்க்கப்பல்

Monday, February 17th, 2025 at 11:40 (SLT)

இந்தோனேசிய கடற்படையின் போர்க்கப்பலான ‘KRI BUNG TOMO – 357’ நேற்று (பெப்ரவரி 16, 2025) நல்லெண்ண விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை(port of colombo) வந்தடைந்தது, மேலும் கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையால் வரவேற்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி

Monday, February 17th, 2025 at 11:34 (SLT)

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், கிழவன்குளம், பதினெட்டாம் போர் , கொக்காவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏ_ 9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

மேலும் வாசிக்க >>>

ஒன்றரை மாதத்தில் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

Monday, February 17th, 2025 at 11:28 (SLT)

ஜனவரி 2025 முதல், 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 7 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இந்தியா இலங்கையை கைவிட்டது : சுட்டிக்காட்டும் ரணில்

Monday, February 17th, 2025 at 11:25 (SLT)

அதானி குழுமம் இலங்கையின் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டமை, இந்தியா இலங்கையை கைவிட்டதற்கான அறிகுறி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருடைய காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பேருந்தும் – வானும் மோதி விபத்து : 12 பேர் படுகாயம்

Monday, February 17th, 2025 at 11:14 (SLT)

கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் உள்ள வெவெதென்ன பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை ஏற்றிச் சென்ற வேனும் மோதியதில் எட்டு இளம் பெண்கள் உட்பட 12 பேர் கந்தகெட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

Monday, February 17th, 2025 at 11:08 (SLT)

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நாட்டின் அடுத்தக்கட்ட அபிவிருத்தி இலக்கியை நிறைவேற்றும் வகையிலான முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன்,அனைத்து தரப்பினரையும் பொருளாதார நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் இம்முறை விசேட அவதானம் செலுத்தப்படவில்லை.

மேலும் வாசிக்க >>>

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Sunday, February 16th, 2025 at 13:10 (SLT)

ஓமானின் மஸ்கற் நகரில் இன்று (16) ஆரம்பமாகவுள்ள 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சானது இந்திய பவுன்டேஷனுடன் இணைந்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பங்கேற்புடன் வருடாந்தம் நடாத்தும் இந்து சமுத்திர மாநாடு இம்முறை ஓமானின் மஸ்கற் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகி, திங்கட்கிழமை (17) வரை நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருளுடன் 16,000 பேர் கைது

Sunday, February 16th, 2025 at 13:07 (SLT)

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 16,000 பேர் கைதாகியுள்ளதாக ஊடகப் பேச்சாளரரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>