முல்லேரியாவில் 02 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Wednesday, January 29th, 2025 at 10:09 (SLT)

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பிரிட்டன் அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் தமிழ் பிரதிநிதிகளை சந்திப்பு

Wednesday, January 29th, 2025 at 10:02 (SLT)

பிரிட்டனின் இந்து – பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்

Wednesday, January 29th, 2025 at 9:58 (SLT)

தமிழகம், காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழர்களுக்கு எந்த விமோசனசனமும் இல்லை : கஜேந்திரகுமார்

Wednesday, January 29th, 2025 at 9:48 (SLT)

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை எனவும் அவ்வாறு ஒற்றையாட்சி அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் எதிர்காலத்தில் பணவீக்கம் ஏற்படக்கூடும்

Wednesday, January 29th, 2025 at 9:41 (SLT)

2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில் ஆழமான பணவீக்கம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள்

Wednesday, January 29th, 2025 at 9:33 (SLT)

விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதன் 100 ஆவது செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆபிரிக்காவின் முன்செக்ஸ் நகர சிறைச்சாலையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

Wednesday, January 29th, 2025 at 9:30 (SLT)

கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு எம்-23 எனும் கிளர்ச்சிக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.கடந்த வாரம் கோமா நகரில் குறித்த கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 13 பேர் பலியாகினர். எனவே, இவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அந் நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Wednesday, January 29th, 2025 at 9:26 (SLT)

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : பெருமளவான கோடா, கசிப்பு கைப்பற்றல்

Wednesday, January 29th, 2025 at 9:23 (SLT)

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரினால் செவ்வாய்கிழமை (28.01.2025) மாலை முற்றுகையிடப்பட்டதில் 23 பரல்களில் 15 இலட்சம் மில்லிலீற்றர் கோடா 5,25,000 லீற்றர் கசிப்பு உள்ளிட்ட தோணி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

தென்கொரியாவில் பயணிகள் விமானத்தில் தீ : 176 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

Wednesday, January 29th, 2025 at 9:19 (SLT)

தென்கொரியாவில் பயணிகள் விமானமொன்று தீப்பிடித்ததில் 176 பேர் அவசரஅவசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தென்கொரியாவின் ஹிம்ஹாய விமானநிலையத்தில் தென்கொரியாவின் புசான் பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இதனை தொடர்ந்து 169 பயணிகளும் ஏழு விமானப்பணியாளர்களும் உடனடியாக விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்,மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

தொடரும் கைதுகள் மொட்டு கட்சிப் பிரதிதிகளை திடீரென சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ

Tuesday, January 28th, 2025 at 9:31 (SLT)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிதிகளுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு விஜேராம வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் கடந்த வருடத்தில் 321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

Tuesday, January 28th, 2025 at 9:28 (SLT)

சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

Tuesday, January 28th, 2025 at 9:25 (SLT)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

சயீப் அலிகான் வழக்கு…தவறுதலாக கைதான நபர் வாழ்க்கை வீணாகிவிட்டதாக வேதனை

Tuesday, January 28th, 2025 at 9:20 (SLT)

ஜனவரி 16 ஆம் திகதி நடிகர் சயீப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.

மேலும் வாசிக்க >>>

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது

Tuesday, January 28th, 2025 at 9:15 (SLT)

சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்துறை அலுவலகத்தின் அனுமதி சீட்டுடன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>