சிரியாவில் அசாத்திற்கு ஆதரவான குழுவினர் தாக்குதல் :14 படையினர் பலி

Thursday, December 26th, 2024 at 8:26 (SLT)

சிரியாவில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பசார் அல் அசாத்திற்கு விசுவாசமான படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உள்துறைஅமைச்சை சேர்ந்த 14 இராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.சிரியாவின் மேற்கில் உள்ள மத்தியதரைகடல் நகரமான டார்டுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் இன்றைய வானிலை

Thursday, December 26th, 2024 at 8:21 (SLT)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மேலும் வாசிக்க >>>

சுனாமி அனர்த்தத்தின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

Thursday, December 26th, 2024 at 8:15 (SLT)

இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு நாளை 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

கஜகஸ்தான் விமான விபத்து : இதுவரை 42 பேர் பலி

Wednesday, December 25th, 2024 at 23:55 (SLT)

அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 62 பயணிகள் மற்றும் விமானி உள்பட 5 பணியாளர்கள் என 67 பேர் இருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

நத்தார் பண்டிகை இன்று

Wednesday, December 25th, 2024 at 13:29 (SLT)

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்றைய தினம் மக்கள் நினைவு கூருகின்றனர். இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் நத்தார் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம்

Wednesday, December 25th, 2024 at 13:24 (SLT)

வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24) இரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம்:சஜித் பிரேமதாச

Wednesday, December 25th, 2024 at 13:22 (SLT)

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் அமைதி மற்றும் அன்பின் அடையாளமாக புனித நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளது. இறைவனின் அன்பும் மனித கௌரவமும் மனிதநேயம் சார்ந்த சமூகத்திற்கு நம்பகமான அடித்தளத்தை அமைத்தது. அன்று இயேசு நாதர் போதித்த அமைதி, அன்பு, கருணை, சகவாழ்வு, இரக்கம் ஆகியவை இன்றைய நமது சமூகத்தை நாகரீகமாக்க போதுமானதாக இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

Wednesday, December 25th, 2024 at 13:19 (SLT)

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார். இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும். நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகிறோம்.

மேலும் வாசிக்க >>>

கொலை குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய அப்பாவும் மகனும் கைது

Wednesday, December 25th, 2024 at 13:14 (SLT)

கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இம்மாதம் 22ஆம் திகதி, மாதம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடபிட்டிய பகுதியில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதில், 42 வயதுடைய நபரை தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மேற்படி இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

வடக்கு ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு

Wednesday, December 25th, 2024 at 13:11 (SLT)

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தலிபான்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் : 15 பேர் பலி

Wednesday, December 25th, 2024 at 12:47 (SLT)

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் நேற்று இரவு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் உள்ள தலிபான் மறைவிடங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

உலக நல்லிணக்கத்துக்கான திருநாளாக இது அமையட்டும் : கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் சுட்டிக்காட்டு

Wednesday, December 25th, 2024 at 12:45 (SLT)

“நத்தார் பண்டிகை தவறுகளை மன்னிக்கவும் சமரசம் செய்யவும் நினைவூட்டுகிறது. ஆகவே, எமது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பரந்த உலகுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இந்த நத்தார் தினம் அமையட்டும்.”

மேலும் வாசிக்க >>>

ரெலோ நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய நத்தார் வாழ்த்துக்கள்

Wednesday, December 25th, 2024 at 0:01 (SLT)

அன்பார்ந்த ரெலோ நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது நத்தார் தின வாழ்த்துகள்

www.telonews.com


கேப்பாப்பிலவு படை முகாமில் 103 மியன்மார் அகதிகளையும் தடுத்து வைப்பதற்கு அரசு முடிவு

Tuesday, December 24th, 2024 at 10:35 (SLT)

கடந்த வாரம் முல்லைத்தீவு மீனவர்களினால் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்கப்படுவதற்காக நேற்று மாலை 5 மணியளவில் அங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வடமாகாண ஆளுநரை சந்தித்த யாழ். மாவட்ட கட்டளை தளபதி

Tuesday, December 24th, 2024 at 10:32 (SLT)

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகமை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மேலும் வாசிக்க >>>