மகிந்த ராஜபக்சவிற்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினால் ஆபத்து : மனோஜ் கமகே

Tuesday, December 24th, 2024 at 10:30 (SLT)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரும் நேற்று (23) முதல் நீக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அநுரவுக்கு சவால் மிக்கது : முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் யஷ்வர்தன் சின்ஹா

Tuesday, December 24th, 2024 at 10:25 (SLT)

பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என நம்புகிறேன்.

மேலும் வாசிக்க >>>

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ரஷ்ய பிரஜை கைது

Tuesday, December 24th, 2024 at 10:20 (SLT)

குஷ் போதைப்பொருளை மறைத்து வைத்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்த வெளிநாட்டவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறி நுழைந்த இருவர் கைது

Tuesday, December 24th, 2024 at 10:16 (SLT)

வைத்திய அத்தியட்சகரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதி  

Tuesday, December 24th, 2024 at 10:13 (SLT)

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஏஞ்சல் யுரேனா டுவிட்டர் பதிவில்,

மேலும் வாசிக்க >>>

ஜாஎல பகுதியில் துப்பாக்கிச் சூடு

Tuesday, December 24th, 2024 at 10:10 (SLT)

ஜாஎல சாந்த ஹானா பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு

Tuesday, December 24th, 2024 at 9:59 (SLT)

ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் வாசிக்க >>>

காசாவில் உயிரிழந்த 35,000 மக்களின் பெயர்கள் அடங்கிய 150 மீட்டர் பேனர் சிட்னியில் காட்சிப்படுத்தப்பட்டது

Tuesday, December 24th, 2024 at 1:01 (SLT)

காசா பகுதியில் 35,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், அவர்களின் பெயர்களைக் கொண்ட 150 மீட்டர் நீளமான பேனர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இருந்து முப்படைகள் நீக்கம்

Monday, December 23rd, 2024 at 11:46 (SLT)

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Monday, December 23rd, 2024 at 11:43 (SLT)

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் அவதானம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

செல்பியால் நேர்ந்த விபரீதம் ரயில் மோதி இருவர் உயிரிழப்பு

Monday, December 23rd, 2024 at 11:39 (SLT)

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலில் மோதி பாடசாலை மாணவி ஒருவரும் பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழப்பு : இலங்கை மின்சார சபை

Monday, December 23rd, 2024 at 11:33 (SLT)

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஒருவர் கைது : நால்வர் தப்பியோட்டம்

Monday, December 23rd, 2024 at 11:29 (SLT)

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய நெகுடுனுவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர். கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிரேசிலில் தனியாருக்கு சொந்தமான விமானம் விழுந்து நொருங்கி விபத்து : கோடீஸ்வரர் உட்பட பத்து பேர் பலி

Monday, December 23rd, 2024 at 11:26 (SLT)

பிரேசிலின் தென்பகுதியில் தனியாருக்கு சொந்தமான விமானமொன்று விழுந்து நொருங்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் கிரமாடோ என்ற நகரத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து கண்காணிப்பு

Monday, December 23rd, 2024 at 11:19 (SLT)

பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை மையமாகக் கொண்டு இன்று (23) முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதிகரித்து வரும் பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சம்பந்தப்பட்ட வீதி விபத்துகளைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

மேலும் வாசிக்க >>>