13 ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறு தியை மஹிந்தவிடமிருந்து பெற்றவர் மன்மோகன் சிங்

Saturday, December 28th, 2024 at 8:15 (SLT)

“அமரர் கலாநிதி மன்மோகன் சிங், இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில், “13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியை இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பெற்றிருந்தார்.”

மேலும் வாசிக்க >>>

ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி செய்த சந்தேக நபர் இருவரும் பொலிசாரால் கைது

Saturday, December 28th, 2024 at 8:11 (SLT)

கிளிநொச்சியில் வியாழக்கிழமை (26) மாலை ஊடகவியலாளர் ஒருவரை ஏ9 வீதியில் வைத்து தாக்கி கருப்பு நிற வாகனம் ஒன்றில் கடத்த முயற்சி செய்த சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைப்பு

Saturday, December 28th, 2024 at 8:07 (SLT)

1.6 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் வியாழக்கிழமை (26) இந்தியாவிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சு கிடையாது : அமைச்சர் சந்திரசேகர் திட்டவட்டம்

Saturday, December 28th, 2024 at 8:02 (SLT)

இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் வாசிக்க >>>

சூரியனை மிக நெருக்கத்தில் கடந்து நாசா விண்கலம் சாதனை

Saturday, December 28th, 2024 at 7:57 (SLT)

சூரியனை இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பாா்க்கா் விண்கலம் சாதனை படைத்துள்ளது. வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்தி சூரியனை சுற்றிவந்து ஏழு ஆண்டுகளுக்கு ஆய்வு செய்வதற்காக பாா்க்கா் விண்கலம் கடந்த 2018-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Friday, December 27th, 2024 at 13:44 (SLT)

வீதியில் ஓடிக்கொண்டிருந்த டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளது. இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் டிப்பருடன் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு, முன்னால் சென்ற லொறி மற்றும் காருடன் மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

மேலும் வாசிக்க >>>

வடமாகாண விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை

Friday, December 27th, 2024 at 13:41 (SLT)

விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுப்பதன் ஊடாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

Friday, December 27th, 2024 at 13:38 (SLT)

டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த மேற்படி பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்

Friday, December 27th, 2024 at 7:42 (SLT)

​முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்​களும் இரங்கல் தெரி​வித்​துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு

Friday, December 27th, 2024 at 7:35 (SLT)

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மிதப்பதை நேற்று வியாழக்கிழமை (26) அதிகாலை அவதானித்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டுவந்ததாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இரவு நேர போக்குவரத்து சோதனை முறையில் மாற்றம்

Thursday, December 26th, 2024 at 13:46 (SLT)

இரவு நேரங்களில் வாகன சோதனைகளை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தொடர் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கடலில் மூழ்கி இந்திய பிரஜை உயிரிழப்பு

Thursday, December 26th, 2024 at 13:40 (SLT)

ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 57 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு விரைந்து முற்றுப்புள்ளி : அமைச்சர் சரோஜா சாவித்ரி தலைமையில் தேசிய செயற்திட்டம் அங்குரார்ப்பணம்

Thursday, December 26th, 2024 at 13:38 (SLT)

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கிலான இரண்டாவது பல்துறைசார் தேசிய செயற்திட்டம் அண்மையில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறைப்பு

Thursday, December 26th, 2024 at 13:35 (SLT)

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை இவ் வாரம் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கடந்த 24 ஆம் திகதி கலந்துரையாடியதுடன் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் இடமாற்ற உத்தரவுகளை அமுல்படுத்தும் திகதி நீடிப்பு

Thursday, December 26th, 2024 at 13:33 (SLT)

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற உத்தரவு நீடிப்பது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>