தெற்கு அதிவேக வீதியில் விபத்து 10 வயது மகள் பலி , தாய், தந்தை, மற்றுமொரு மகள் காயம்

Thursday, December 12th, 2024 at 10:47 (SLT)

தெற்கு அதிவேக வீதியில் 100 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் நேற்று புதன்கிழமை (11) இரவு இடம்பெற்ற விபத்தில் 10 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதுடன் தாய், தந்தை, மற்றுமொரு மகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பயிர்ச்செய்கைகளை நாசம் செய்யும் காட்டு விலங்குகளை கொல்ல வேண்டும் என்று குறிப்பிடவில்லை : லால் காந்த 

Thursday, December 12th, 2024 at 10:42 (SLT)

தொற்றுநோய் போன்று பரவும் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலியலாளர்கள் குறிப்பிடுவதை போன்று நீண்டகால தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் விவசாயிகள் முழுமையாக இல்லாதொழியும் என விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சிட்னியில் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதியில் இஸ்ரேலிற்கு எதிரான வாசகங்கள் : கார் தீக்கிரை

Thursday, December 12th, 2024 at 10:38 (SLT)

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் கார்களை சேதப்படுத்தியுள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிரான வாசகங்களை எழுதி சென்றுள்ளனர். அவுஸ்திரேலியாவில் யூதவழிபாட்டு தலம் சேதமாக்கப்பட்டதால் உண்டான பதற்றநிலை நீடிக்கின்ற நிலையிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் வாசிக்க >>>

யாழில் 213 கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது 

Thursday, December 12th, 2024 at 10:33 (SLT)

யாழில் 213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் மீசாலை பகுதியைச் சேர்ந்த இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 51 ஆவது படைப்பிரிவு இராணுவமுகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் பெருமளவான கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 55 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

Thursday, December 12th, 2024 at 10:30 (SLT)

ராஜஸ்தானில் 150 அடி ஆள்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் 55 மணி போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டான். ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் காளிகாத் என்ற கிராமத்தில் ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் கடந்த திங்கட்கிழமை மாலை தனது நண்பர்களுடன் வயலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

மேலும் வாசிக்க >>>

மேற்குகரையில் பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம் : 10 வயது இஸ்ரேலிய சிறுவன் பலி

Thursday, December 12th, 2024 at 10:26 (SLT)

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் பேருந்தொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்து வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். பொதுமக்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் பலத்த மழை

Thursday, December 12th, 2024 at 10:20 (SLT)

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-இலங்கைக்கு அருகில் உள்ள தமிழகக் கடற்கரையை நோக்கி, மெதுவாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்லும்.

மேலும் வாசிக்க >>>

FIFA 2034 உலகக் கிண்ண போட்டி சவூதி அரேபியாவில்

Thursday, December 12th, 2024 at 10:18 (SLT)

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 2034 ஆம் ஆண்டுக்கான “பிஃபா” (FIFA) உலகக் கிண்ணம் சவூதி அரேபியாவில் நடைபெறும் என்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை (11) அறிவித்தது. 2034 “ஃபிஃபா” உலகக் கிண்ண நிகழ்வினை நடத்துவதற்கான போட்டி ஏலத்தில் சவூதி அரேபியா மட்டுமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வடக்கை மிரட்டும் மர்மகாய்ச்சல் : ஆளுநர் எடுத்த நடவடிக்கை

Wednesday, December 11th, 2024 at 11:53 (SLT)

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் 4 பேர் திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரனுடன் நேற்றையதினம் மாலை(10) தொலைபேசியில் உரையாடினார்.

மேலும் வாசிக்க >>>

பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை உடன் நீக்கு ஐ.நா அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

Wednesday, December 11th, 2024 at 11:32 (SLT)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு – தெற்கு சகோதரத்துவம் அமைப்பினர், பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறை சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் வாசிக்க >>>

தீயில் முற்றாக எரிந்து நாசமான வீடு களுத்துறையில் சம்பவம்

Wednesday, December 11th, 2024 at 11:24 (SLT)

களுத்துறை, வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீட்பு

Wednesday, December 11th, 2024 at 11:19 (SLT)

காலி மாவட்டத்தில் அஹுங்கல்ல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை

Wednesday, December 11th, 2024 at 11:13 (SLT)

மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கேகல பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிய ஆட்சியிலாவது தீர்வு வேண்டும்:துரைராசா ரவிகரன்

Wednesday, December 11th, 2024 at 11:10 (SLT)

இந்தநாட்டில் முந்தைய அரசாங்கங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கண்டுகொள்ளாத நிலையில், புதிய ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சர்ச்சைக்குரிய மத போதகர் தொடர்பில் பேராயர் சம்மேளனம் விடுத்துள்ள அறிவிப்பு

Wednesday, December 11th, 2024 at 11:05 (SLT)

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் இலங்கை கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெரோம் கத்தோலிக்க பேராயர் சம்மேளனத்தின் உறுப்பினர் அல்ல என தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>