அம்பாந்தோட்டையில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது. அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கணித சிக்கல்களை ஐந்து நிமிடத்தில் தீர்க்கும் சிப்

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

இயற்பியலின் கூறுகளைக் கொண்டு மிகவும் சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பதற்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் நிறுவனம் சார்பாக இப் புதிய குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

கொழும்பு கஹதுடுவ, பகுதியிலுள்ள வீடொன்றில் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சிறுவர்களுக்கான சட்டத்தை கடுமையாக்கிய குயின்ஸ்லாந்து

Friday, December 13th, 2024 at 11:55 (SLT)

அவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து சிறுவர்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கியுள்ளது. அதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கொலை, கடுமையான தாக்குதல் மற்றும் கொள்ளை போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டால் வயதுவந்தவர்களுக்கான விதிக்கப்படும் அதே தண்டனையை எதிர்கொள்வார்கள்.

மேலும் வாசிக்க >>>

எலிக்காய்ச்சல் தொற்றை நேரில் ஆராய வடக்குக்கு வந்தது வைத்திய நிபுணர் குழு

Friday, December 13th, 2024 at 11:15 (SLT)

வடக்கு மாகாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள நிலைமைகளை ஆராயும் நோக்கில் கொழும்பிலிருந்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவைச் சேர்ந்த வைத்திய நிபுணர் குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அநுர இப்போது ‘கோட்டா : பகுதி 2’ ஆகிவிட்டாரா? சஜித் அணி கேள்வி

Friday, December 13th, 2024 at 11:12 (SLT)

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று பொம்மை பட்டதாரி அமைச்சர்கள் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசிலும் உள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ‘கோட்டாபய பகுதி – 2’ ஆக மாறிவிட்டாரா?.”

மேலும் வாசிக்க >>>

ரயில் சேவையை மேம்படுத்த விசேட கவனம் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Friday, December 13th, 2024 at 11:08 (SLT)

ரயில் ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு துரிதமான தீர்வுகளை வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும் : ஆ.கேதீஸ்வரன்

Friday, December 13th, 2024 at 11:03 (SLT)

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று இரவு விண்கல் மழைப் பொழிவு

Friday, December 13th, 2024 at 10:57 (SLT)

இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் இன்றைய வானிலை

Friday, December 13th, 2024 at 10:53 (SLT)

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வட்ஸ்அப் சேவைகள்

Thursday, December 12th, 2024 at 11:07 (SLT)

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் : நளிந்த ஜயதிஸ்ஸ

Thursday, December 12th, 2024 at 11:02 (SLT)

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை நாம் இப்போது எடுத்துள்ளோம்.

மேலும் வாசிக்க >>>

இந்திய படகுகளுக்கு அனுமதி வழங்கும் எந்த திட்டமும் என்னிடம் இருந்ததில்லை : டக்ளஸ் தேவானந்தா

Thursday, December 12th, 2024 at 10:58 (SLT)

இந்திய இழுவைமடி படகுகள் இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் தொழிலில் ஈடுபடுதற்கு அனுமதியளிக்கும் எந்தவகையான திட்டமும் கடந்த காலங்களில் தம்மிடம் இருந்திருக்கவில்லை என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Thursday, December 12th, 2024 at 10:54 (SLT)

காலி, இமதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்கும்புர பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Thursday, December 12th, 2024 at 10:51 (SLT)

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.

மேலும் வாசிக்க >>>