இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

Tuesday, December 10th, 2024 at 8:27 (SLT)

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை – தமிழ்நாடு கரைகளுக்கு அப்பாற்பட்ட தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வாகன இறக்குமதி குறித்து அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Tuesday, December 10th, 2024 at 7:30 (SLT)

எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எமது பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்து கொண்டு வாகன இறக்குமதி தொடர்பில் எமது அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கவனயீனத்தால் நடந்த துயரம் அமெரிக்கா செல்லவிருந்த இளைஞன் சாவு

Tuesday, December 10th, 2024 at 6:26 (SLT)

புத்தளம் – சிலாபம், வட்டக்கல்லிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபம் வட்டக்கல்லிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தினுக ஷஷேந்திர பெரேரா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆப்பிரிக்காவில் அமைதி காக்க செல்லும் இலங்கை இராணுவம்

Monday, December 9th, 2024 at 11:23 (SLT)

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் படையின் 108 பேர் கொண்ட குழு ஒன்று மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படையின் உறுப்பினர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

தப்பியோடிய அதிபருக்கு அடைக்கலம் கொடுத்த ரஷ்யா

Monday, December 9th, 2024 at 11:18 (SLT)

நாட்டைவிட்டு தப்பியோடிய சிரிய அதிபர் பஷார் அல்-அசாதுக்கு அடைக்கலம் வழங்கியிருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. தலைநகர் டமாஸ்கஸிலிருந்து தப்பிச் சென்ற அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆதரிப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியது. அசாதின் ஆட்சியின்போது சிரியாவின் முக்கிய நட்பு நாடாக ரஷ்யா இருந்தது.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கம் மக்கள் ஆணையை புறக்கணித்து ரணிலின் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டையே முன்னெடுக்கிறது : சஜித்

Monday, December 9th, 2024 at 11:09 (SLT)

பெரும் மக்கள் ஆணையையும், கூடிய ஆசனங்களையும் பெற்று, பாராளுமன்ற வரத்தைப் பெற்றுக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு குறித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பொடி லெசி” யின் சிறைக் கூண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் மீட்பு

Monday, December 9th, 2024 at 11:06 (SLT)

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறைக் கூண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மலசல கூட குழி நிர்மாணத்தின்போது தவறி விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Monday, December 9th, 2024 at 11:00 (SLT)

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றில் மலசல கூட குழி நிர்மாணப் பணியின்போது தவறி விழுந்து குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்தார். மலசல கூட குழி நிர்மாண வேலைகளில் இருவர் ஈடுபட்டிருந்தவேளை, அந்த இருவரும் தவறி விழுந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஆவா குழுவின் தலைவர் கனடாவில் கைது நாடு கடத்துமாறு பிரான்ஸ் வேண்டுகோள்

Monday, December 9th, 2024 at 10:57 (SLT)

இலங்கையில் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் குழுவான ஆவாவின் தலைவர் என கருதப்படும் பிரசன்னா நாகலிங்கம் கொலை குற்றச்சாட்டு மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரான்சிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கின்றார். இலங்கையிலிருந்து பிரான்சிலிருந்தும் தப்பியோடிய பின்னர் அவர் இந்த வருடம் கனடாவில் கைதுசெய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

அநுராதபுரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

Monday, December 9th, 2024 at 10:49 (SLT)

அநுராதபுரம், இப்பலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலவ்வேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கடவுச்சீட்டுப் பணிகளை விரைவுபடுத்த மேலதிக நேரச் சேவையில் ஈடுபடும் அதிகாரிகள்

Monday, December 9th, 2024 at 10:46 (SLT)

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, குறித்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இன்று பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Monday, December 9th, 2024 at 10:43 (SLT)

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை அண்மித்து டிசம்பர் 11 ஆம் திகதியளவில் அடைய வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தின் கீழ், டிசம்பர் 10 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் கடற்படையினர் 2,138 பேருக்கு பதவி உயர்வுகள்

Monday, December 9th, 2024 at 10:40 (SLT)

இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டு நிறைவு விழா இன்று (09) பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில் 2,138 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு இன்று முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


1 கிலோ அரிசியின் மொத்த விலை 225/=

Monday, December 9th, 2024 at 10:36 (SLT)

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த 10 நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் வெளியேற்றப்படும் அதிகாரிகள்

Monday, December 9th, 2024 at 10:32 (SLT)

ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள 38 அமைச்சின் திட்ட அலுவலகங்களில் பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று பொது நிர்வாக அமைச்சுக்கு நியமிக்கப்பட்டு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட உயர் அதிகாரிகளில் 38 திட்ட அலுவலகங்களின் தலைமை இயக்குனர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>