நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

Saturday, December 7th, 2024 at 10:38 (SLT)

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் 

Saturday, December 7th, 2024 at 10:35 (SLT)

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

Saturday, December 7th, 2024 at 10:31 (SLT)

வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எதிர்க்கட்சிகளின் அரசியல் பேரவையின் பிரதிநிதி: சிவஞானம் சிறிதரன்

Saturday, December 7th, 2024 at 10:25 (SLT)

அரசியல் அமைப்பின் பேரவைக்கான எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிக்கான தேர்தலில் சிவஞானம் சிறிதரனுக்கு கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதரவு வழங்கியுள்ளார். சிவஞானம் சிறிதரனை கோடீஸ்வரன் முன்மொழிய கயேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்து தனது வாக்கையும் சிறிதரன் அவர்களுக்கு வழங்கியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அர்ச்சுனாவை தொடர்ந்து இறுதி யுத்தத்தை நாடாளுமன்றில் நினைவுகூர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்

Saturday, December 7th, 2024 at 10:21 (SLT)

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில், தமிழ் மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நாடாளுமன்றில் நேற்று (06) உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழ்ப்பாண கடற்பரப்பில் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

Saturday, December 7th, 2024 at 10:16 (SLT)

யாழ்ப்பாண கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கரையொதுங்கிய இருந்த சுமார் 45.5 கிலோகிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

‘லொக்கு பெட்டி’ யை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

Saturday, December 7th, 2024 at 10:13 (SLT)

பெலரூஸ் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான லொக்குபெட்டி விடுதலை செய்யப்படவில்லை என்றும் அந்த நாட்டு பொலிஸாரினால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொரியாவுக்கு தொழிலுக்கு அனுப்பும் ஈ8 விசா சட்ட ரீதியிலானது அல்ல : அமைச்சர் விஜித்த ஹேரத்

Saturday, December 7th, 2024 at 10:08 (SLT)

கொரியாவுக்கு தற்காலிகமாக தொழிலுக்கு அனுப்பும் ஈ8 விசா எந்தவகையிலும் சட்ட ரீதியிலானது அல்ல. அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

Saturday, December 7th, 2024 at 10:04 (SLT)

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தென் ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்துக்குள் சிக்குண்ட ஆறு தொழிலாளர்கள் உயிரிழப்பு

Saturday, December 7th, 2024 at 10:00 (SLT)

தென் ஆபிரிக்காவின் ஸ்டில்போன்டைன் எனும் இடத்தில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்துக்குள் தங்கம் எடுப்பதற்காக பல சுரங்கத் தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.சுரங்கத்துக்குள் சென்ற அவர்கள் எதிர்பாராத விதமாக அதற்குள் சிக்கியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Saturday, December 7th, 2024 at 9:57 (SLT)

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் யஸ்மின் சூகா வலியுறுத்து

Saturday, December 7th, 2024 at 9:54 (SLT)

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது.

மேலும் வாசிக்க >>>

பேரீச்சம்பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் முதல் மென்பானம்: சவூதியின் மிலாஃப் கோலா’

Saturday, December 7th, 2024 at 9:48 (SLT)

‘மிலாஃப் கோலா’ எனும் பெயரில் உலகின் முதலாவது பேரீச்சம்பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கோலாவினை சவூதி அரேபியா உற்பத்தி செய்துள்ளது. இது பாரம்பரியத்தையும் புதுமையையும் ஒன்றிணைப்பதுடன் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதைப் போன்று உலக சந்தையில் இயற்கையான ஆரோக்கிய மென்பானத்திற்கான இடைவெளியையும் பூர்த்தி செய்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆடையுடன் பயணித்தார் ரணில் ஆடையின்றி பயணிக்கிறார் அனுர : கபீர் ஹாசிம்

Friday, December 6th, 2024 at 13:06 (SLT)

அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆடையுடன் தொங்கு பாலத்தில் பயணித்தார் . தற்போதைய ஜனாதிபதி ஆடையில்லாமல் தொங்கு பாலத்தில் பயணிக்கின்றார் இதுதான் இவர்களின் மாற்றம் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கபீர் ஹாசிம், வணிக கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஆடை அணிந்து கொண்டா கைச்சாத்திட போகிறது எனவும் கேள்வி எழுப்பினார்

மேலும் வாசிக்க >>>

தான் உரையாற்றுவதற்கு எதிர்க்கட்சித்தலைவர் நேரம் ஒதுக்குகிறார் இல்லை : அர்ச்சுனா

Friday, December 6th, 2024 at 13:02 (SLT)

தான் உரையாற்றுவதற்கு எதிர்க்கட்சித்தலைவர் நேரம் ஒதுக்குகிறார் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோது,

மேலும் வாசிக்க >>>