ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் : யாழில் அங்கஜன்

Friday, September 13th, 2024 at 12:08 (SLT)

நாட்டில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென சிறிலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்:சஜித் பிரேமதாச

Friday, September 13th, 2024 at 8:23 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா கோவிட் தொற்று பரவல், நாட்டின் வங்குரோத்து நிலைமை என்னவற்றினால் 220 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். நாடு விழுந்திருக்கின்ற இந்த பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.

மேலும் வாசிக்க >>>

கட்சித் தீர்மானத்தை சிறீதரனும், மாவையும் ஏற்றுள்ளனர்: சஜித்திற்கு ஆதரவளிப்பதில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன்

Friday, September 13th, 2024 at 8:18 (SLT)

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மலேசியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 400 குழந்தைகள் மீட்பு: இஸ்லாமிய மத ஆசிரியர்கள் உட்பட 170 பேர் கைது

Friday, September 13th, 2024 at 8:14 (SLT)

மலேசியாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பராமரிப்பு இல்லங்களிலிருந்து அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டை கட்டியெழுப்பத் தயார்:அனுரகுமார திஸாநாயக்க

Thursday, September 12th, 2024 at 10:43 (SLT)

நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மஹியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் : ஜனாதிபதி

Thursday, September 12th, 2024 at 10:39 (SLT)

நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் நாட்டை முன்னேற்றும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டிற்கு முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

திருட்டு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் : திலித் ஜயவீர வலியுறுத்து

Thursday, September 12th, 2024 at 10:31 (SLT)

நாட்டு மக்களை பல வருடங்களாக வறுமையில் தள்ளியுள்ள, திருட்டு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்துள்ளதாக ‘சர்வஜன பலய’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எமது உயிருக்கு பாதுகாப்பு இல்லை வவுனியாவில் பணிப்புறக்கணிப்பில் குதித்த அரச பேருந்து ஊழியர்கள்

Thursday, September 12th, 2024 at 10:29 (SLT)

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துறர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட பலர் பலி

Thursday, September 12th, 2024 at 10:08 (SLT)

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்;குதலில் ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 கொல்லப்பட்டுள்ளனர். விமானதாக்குதல் இடம்பெற்றது என ஐநா தெரிவித்துள்ளது.காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன,கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மலையகத் தமிழர்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாக்குகளை தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் மனமுவந்து ஏற்றுக்கொள்வார் : சி.வி.விக்கினேஸ்வரன்

Thursday, September 12th, 2024 at 10:01 (SLT)

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார். அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக மக்களும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களும் அவருக்கு ஆதரவாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜே.வி.பி. திசைகாட்டியின் பின் மறைந்தாலும் மணியையும் சிவப்பு நிறத்தையும் கைவிடவில்லை : திலும் அமுனுகம

Thursday, September 12th, 2024 at 9:56 (SLT)

வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்காக அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் பாஸ்போர்ட் போட்டோவை மாற்றி வேறு பெயரில் விசா பெற்று செல்வதுபோன்று இன்று இதே திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜே .வி.பி ) திசைகாட்டி என தனது முன்னைய முகத்தை மறைத்து, அவ்வாறான வேலைத்திட்டத்தை பின்பற்றி மக்களிடம் வலம் வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஐக்கிய மக்கள் சக்திக்குள் வலுக்கும் விரிசல் ரணில் பக்கம் தாவ தயாராகும் முக்கியஸ்தர்கள்.?

Wednesday, September 11th, 2024 at 12:32 (SLT)

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாததால் சில தொகுதி அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

இலட்சக்கணக்கில் அழிக்கப்பட்ட தேர்தல் சுவரொட்டிகள் பொலிஸார் அதிரடி நடவடிக்கை

Wednesday, September 11th, 2024 at 12:27 (SLT)

இதுவரையான காலப்பகுதியில் 436,000 சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், 2,400க்கும் மேற்பட்ட சட்டவிரோத பதாகைகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புக்கள் : நாமலின் புதிய திட்டம்

Wednesday, September 11th, 2024 at 12:19 (SLT)

அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

AI தொழிற்நுட்பத்துடன் வெளிவந்தது ஐபோன் 16

Tuesday, September 10th, 2024 at 9:41 (SLT)

செயற்கை நுண்ணறிவை (AI) மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் 16ஐ அதிகாரபூர்வமாக இன்று திங்கட்கிழமை வெளியிட்டது. ஐபோன் 16இல் செயற்கை நுண்ணறிவை (AI) மனதில் வைத்து உருவாக்கப்பட்ட முதல் ஆப்பிள் தயாரிப்பாகும். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவை (AI) இணைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>