கண்டியில் யாசகப் பெண்ணைக் கொன்ற இளைஞன் மற்றொரு கொலையிலும் சிக்கினார்

Tuesday, January 27th, 2026 at 11:40 (SLT)

கண்டி, அருப்பொல பகுதியில் மகாவலி ஆற்றங்கரையில் யாசகப் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, காவல்துறையிடம் சரணடைந்த 30 வயது இளைஞன், அங்கும்புர பகுதியில் நிகழ்ந்த மற்றொரு மர்மக் கொலைச் சம்பவத்துடனும் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக காலவகாசம் கோரிய ஷிரந்தி

Tuesday, January 27th, 2026 at 11:36 (SLT)

தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, அங்கு முன்னிலையாவதற்காக அவர் இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை குறைவு

Tuesday, January 27th, 2026 at 11:33 (SLT)

தமிழகத்தில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.இதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 14,960 ரூபாவாக காணப்படுகிறது.அத்துடன் வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு 12,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வயல் பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு, வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு

Tuesday, January 27th, 2026 at 8:56 (SLT)

திக்வெல்ல – கிரினெலியகந்த பகுதியில், வயல் ஒன்றில் சந்தேகத்திற்குரிய, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், ஒரு கைக்குண்டு மற்றும் 03 ரி-56 வெடிமருந்துகள் என்பன நேற்று திங்கட்கிழமை (26) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

நுவரெலியாவில் pick meக்கு எதிராக போராட்டம்

Tuesday, January 27th, 2026 at 8:53 (SLT)

நுவரெலியாவில் Pick Me செயலிக்கு எதிராக சாரதி சங்கத்தினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் கையெழுத்துக்களை சேகரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டமானது, இன்று திங்கட்கிழமை (26) நுவரெலியா மாநகர சபை மைதானத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா – பதுளை பிரதான வீதியூடாக வாகனங்களில் கருப்புக் கொடி பறக்கவிட்டு வாகனத்தில் பேரணியாக பிரதான நகரை சுற்றி வந்து அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் வாசிக்க >>>

ஜே.வி.பி.யின் அராஜகக் கலாசாரம் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது : ஹர்ஷண ராஜகருணா

Tuesday, January 27th, 2026 at 7:12 (SLT)

ஜே.வி.பி.யின் உண்மையான சுபாவம் இப்போது தான் வெளிப்படுத்தப்படுகிறது. பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அவர்கள் தம்மை எதிர்த்தால் தாம் பதில் தாக்குதல் நடத்துவோம் என அரசாங்கம் கூறுகிறது. ஜே.வி.பி.யின் அராஜகக் கலாசாரம் தற்போது அரங்கேறிக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மன்னிப்புக் கோரினார் லெதன்டி தோட்ட முகாமையாளர்

Tuesday, January 27th, 2026 at 7:05 (SLT)

ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதன்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில், இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகத் தீர்வினைப் பெறும் நோக்கில் நேற்று (26) ஹட்டன் தொழில் திணைக்களத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை

Tuesday, January 27th, 2026 at 7:03 (SLT)

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்

Monday, January 26th, 2026 at 8:48 (SLT)

இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 05 தொழிற்சங்க வழிமுறைகளின் ஊடாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

Monday, January 26th, 2026 at 8:45 (SLT)

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

Monday, January 26th, 2026 at 8:42 (SLT)

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வீட்டுக்கு வேலைக்கு வந்த பெண்ணால் வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Sunday, January 25th, 2026 at 9:22 (SLT)

ஹம்பாந்தோட்ட, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் மருத்துவரின் வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண், வீட்டில் இருந்து சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

Sunday, January 25th, 2026 at 9:13 (SLT)

அம்பலாங்கொடை – வதுகெதர பகுதியில் உள்ள வீடொன்றின் அறைக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ வகை கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Sunday, January 25th, 2026 at 9:11 (SLT)

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து, கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

8 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Sunday, January 25th, 2026 at 9:08 (SLT)

பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று (25) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>