நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

Sunday, January 25th, 2026 at 7:31 (SLT)

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தெற்கு கடலில் கைதான 11 பேரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு

Sunday, January 25th, 2026 at 7:28 (SLT)

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளும், 11 சந்தேகநபர்களும் தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கனடாவுக்கு 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை

Sunday, January 25th, 2026 at 7:25 (SLT)

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கோட்டாபய வழியை தொடர்ந்து தற்போதைய அரசு : சாணக்கியன் கடும் எச்சரிக்கை

Saturday, January 24th, 2026 at 11:22 (SLT)

விவசாயம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை, கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் இந்த அரசுக்கு ஏற்படும் நிலை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கியுடன் காரை கைவிட்டுச் சென்ற சந்தேகநபர் கைது

Saturday, January 24th, 2026 at 11:15 (SLT)

கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் கார் ஒன்றைக் கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவிய ஒருவரும் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை

Saturday, January 24th, 2026 at 11:12 (SLT)

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்து யுவதி உயிர்மாய்ப்பு

Saturday, January 24th, 2026 at 11:08 (SLT)

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. இவரது சடலம் மீட்கப்பட்டதையடுத்து, கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இ.போ.ச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

Saturday, January 24th, 2026 at 11:04 (SLT)

ஹல்தும்முல்ல, சொரகுனே பகுதியில் இ.போ.ச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (23) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஹப்புத்தளையிலிருந்து கிரவனாகம வரை பயணித்த தனியார் பேருந்தும், கிரவனாகமவிலிருந்து பண்டாரவளை வரை பயணித்த இ.போ.ச பேருந்துமே சிக்கியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு

Saturday, January 24th, 2026 at 11:00 (SLT)

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஏழைகளின் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவோம் : ராகுல் காந்தி

Saturday, January 24th, 2026 at 10:56 (SLT)

ஒன்றிய அரசு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (MGNREGA) பல விதிகளை மாற்றி விபி ஜி ராம் ஜி சட்டத்தை கொண்டுவந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

Friday, January 23rd, 2026 at 11:19 (SLT)

வடக்கு, வட- மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (23) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது 

Friday, January 23rd, 2026 at 11:15 (SLT)

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

Friday, January 23rd, 2026 at 11:12 (SLT)

இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

Friday, January 23rd, 2026 at 11:09 (SLT)

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வரலாறு படைக்கும் அதி உச்ச தங்க விலை

Friday, January 23rd, 2026 at 11:07 (SLT)

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>