வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் வலுவடையும் அபாயம்

Thursday, January 8th, 2026 at 12:34 (SLT)

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

2026ல் இலங்கை பொருளாதாரம் 4–5% வளர்ச்சி பெறும் : வங்கியின் ஆளுநர் நம்பிக்கை

Thursday, January 8th, 2026 at 12:30 (SLT)

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைப் பொருளாதாரத்தில் காணப்பட்ட வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சமூக ஊடக மோசடிகளைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்

Thursday, January 8th, 2026 at 11:03 (SLT)

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாளை பிற்பகல் கரையைத் தொடுகிறது தாழமுக்கம்

Thursday, January 8th, 2026 at 10:57 (SLT)

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இவ்வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

Tuesday, January 6th, 2026 at 7:16 (SLT)

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

100 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

Tuesday, January 6th, 2026 at 7:13 (SLT)

நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டலத் தளம்பல் நிலை, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Monday, January 5th, 2026 at 13:58 (SLT)

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வௌிநாட்டு பணவனுப்பல் மூலம் 7 பில்லியனுக்கும் அதிக வருமானம்

Monday, January 5th, 2026 at 13:55 (SLT)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

Monday, January 5th, 2026 at 13:51 (SLT)

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

வெனிசுவேலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஐ.நா தலைவர் கடும் எச்சரிக்கை

Monday, January 5th, 2026 at 5:34 (SLT)

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை காரணமாக சர்வதேச கவனம் அங்கு குவிந்துள்ள நிலையில், ஐ.நா சாசனத்தைக் கடைப்பிடிப்பது என்பது கட்டாயமானது, அது ஒரு விருப்பத்தேர்வு அல்ல என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அன்னலெனா பேர்பக் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மருந்து தட்டுப்பாடு மத்தியில் இந்தியாவுடனான சுகாதார ஒப்பந்தம் ஆபத்தானது : ராஜித்த சேனாரத்ன

Monday, January 5th, 2026 at 5:31 (SLT)

நாட்டில் இன்று பாரியளவில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள சுகாதாரம் தொடர்பான திருட்டு ஒப்பந்தம் நாட்டுக்கு பாரிய ஆபத்தாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வெனிசுலா விவகாரத்தில் ஜனாதிபதி துணிச்சலான நிலைப்பாட்டை அறிவிப்பார் : திலித் ஜயவீர

Monday, January 5th, 2026 at 5:25 (SLT)

வெனிசுலா மீதான வொஷிங்டனின் நடவடிக்கைகளுக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்ப்புத் தெரிவிப்பார் என தாம் நம்புவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். 

மேலும் வாசிக்க >>>

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறார்

Monday, January 5th, 2026 at 5:22 (SLT)

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஒரே நாளில் உலகின் கவனத்தை ஈர்த்த வெனிசுலா : புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ்

Sunday, January 4th, 2026 at 8:30 (SLT)

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் பதிவியேற்றுள்ளார்.நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் ஒரே இரவில் கைது செய்த பின்னர், இந்த திடீர் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இனி வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் : டிரம்ப் அறிவிப்பு

Sunday, January 4th, 2026 at 8:26 (SLT)

வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>