2026 இல் இலங்கையின் பொருளாதாரம் – IMF இன் கணிப்பு

Wednesday, October 29th, 2025 at 8:37 (SLT)

எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1% வரை வளர்ச்சியடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கின்றது. ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான வழக்கு

Wednesday, October 29th, 2025 at 8:34 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பெரிய வெங்காயக் கொள்வனவு: அரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் கடும் அதிருப்தி

Wednesday, October 29th, 2025 at 8:32 (SLT)

அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம் தொடர்பான விதிகள் விவசாயிகளை அநாதரவத்திற்கு தள்ளியுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

மோந்தா சூறாவளி கரையை கடந்தது

Wednesday, October 29th, 2025 at 6:34 (SLT)

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

மூன்று கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

Tuesday, October 28th, 2025 at 13:45 (SLT)

அநுராதபுரத்தில் 106 கிராம் ஹெரோயினுடன் 3 கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (27) மாலை அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொதுச் சொத்துதுஷ்பிரயோகம் : ரணிலுக்கு எதிரான விசாரணை நாளை

Tuesday, October 28th, 2025 at 13:43 (SLT)

பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு நாளை (29.10.2025) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி

Tuesday, October 28th, 2025 at 13:40 (SLT)

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கையில் தங்கத்தின் விலை 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பூஸ்ஸ சிறையில் அதிகளவான கைப்பேசிகள் மீட்பு

Tuesday, October 28th, 2025 at 8:50 (SLT)

பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கான சிறைக்கூடத்தில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Tuesday, October 28th, 2025 at 8:47 (SLT)

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரித்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மதுபான வரி தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவிப்பு

Tuesday, October 28th, 2025 at 8:43 (SLT)

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று (28) முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க >>>

ஹாஷிஷ் போதைப்பொருளுடன் கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் கைது

Tuesday, October 28th, 2025 at 8:41 (SLT)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

Monday, October 27th, 2025 at 8:58 (SLT)

3 கோடியே 40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் ‘மோந்தா’ கடற்றொழிலாளர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை

Monday, October 27th, 2025 at 8:55 (SLT)

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது இன்று புயலாக மாற்றமடையும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மோதல் பணிப்பெண்களை தாக்கிய சவூதி நாட்டவர்

Monday, October 27th, 2025 at 8:50 (SLT)

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை?

Monday, October 27th, 2025 at 8:46 (SLT)

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>