மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் : டிரம்பின் 48 மணி நேரக் கெடுவுக்கு ரஷ்யா

Monday, April 6th, 2026 at 11:01 (SLT)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுக்கு விடுத்துள்ள “நரகம் மழையாய் பொழியும்” என்ற 48 மணி நேர இறுதி எச்சரிக்கையை ரஷ்யா வன்மையாகக் கண்டித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், தனது ஈரானிய சகா அப்பாஸ் அராக்சியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா உடனடியாக தனது “மிரட்டல் மற்றும் இறுதி எச்சரிக்கை மொழியை” (Language of Ultimatums) கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இத்தகைய ஆவேசமான போக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் ஒரு பாரிய போரை நோக்கித் தள்ளும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

826 லீற்றர் டீசலுடன் இருவர் கைது

Monday, April 6th, 2026 at 10:56 (SLT)

கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 826 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும் வாசிக்க >>>

ரூ.5,000 வரையிலான QR கொடுக்கல் வாங்கல்களுக்கு சேவைக் கட்டணம் இரத்து

Monday, April 6th, 2026 at 10:51 (SLT)

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

Monday, April 6th, 2026 at 10:48 (SLT)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8.00 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் 7,000 அடி உயர மலையை ஏறி அங்கே பதுங்கி இருந்த அமெரிக்க பைலட் : உயிர் தப்பியது எப்படி ?

Monday, April 6th, 2026 at 8:15 (SLT)

ஈரானின் மலைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E போர் விமானத்தில் இருந்த இரண்டாவது அதிகாரி உயிர் தப்பியது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விமானம் வீழ்ந்ததும் அவர் பராசூட்டில் இறங்கி உடனடியாக மலைப்பகுதிக்குள் நகர்ந்தார். கடும் காயங்களுடன் இருந்த அவர், சுமார் 48 மணி நேரம் வரை எதிரி நாட்டுக்குள் ஒளிந்து இருந்து உயிர் காத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் 7,000 அடி உயர மலைச்சரிவை 24 மணி நேரமாக தொடர்ச்சியாக ஏறியுள்ளார். பாறை பிளவுகளுக்குள் மறைந்து இருந்தார், என அவரே தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி

Sunday, April 5th, 2026 at 7:25 (SLT)

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உன்னத நிகழ்வான உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சவால்களை வென்று நம்பிக்கையின் விடியலை நோக்கிப் பயணிப்போம் : ஹரிணி அமரசூரிய

Sunday, April 5th, 2026 at 7:23 (SLT)

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் கிறிஸ்தவ மக்களுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

Sunday, April 5th, 2026 at 7:20 (SLT)

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும் (05). இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

30,000 அடி உயரத்தில் இருந்து பாய்ச்சல்: ஈரானில் அமெரிக்க மாலுமியை மீட்க எலைட் படை

Sunday, April 5th, 2026 at 6:34 (SLT)

ஈரான் வான்வெளியில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15இ (F-15E) போர் விமானத்தில் இருந்த இருவரில், விமானி (Pilot) பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான மற்றொரு மாலுமியைத் தேடும் பணி போர்க்களமாக மாறியுள்ளது. இவரை மீட்பதற்காக அமெரிக்க விமானப்படையின் மிகச்சிறந்த ‘பாராரெஸ்க்யூ’ (Pararescue – PJs) வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 30,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து, எதிரி நாட்டு எல்லைக்குள் ஊடுருவி, காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவம் அளித்து அவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் ‘ஹாலோ’ (HALO) முறையில் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க >>>

கடலில் நேரடி மோதல் ஆரம்பம்- ஈரான் படைகள் அமெரிக்க சிப்பாய்கள் மீது தாக்குதல்

Sunday, April 5th, 2026 at 6:30 (SLT)

அடுத்தடுத்து வீழ்ந்த அமெரிக்க விமானங்களில் இருந்த பைலட்டுகளை (விமானிகளை) காப்பாற்ற அமெரிக்கப் படைகள் செம கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. ஒரு பைலட் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமெரிக்கப் படைகள் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளன. அங்கே ஏற்கனவே ஈரானியப் படைகளும் அந்த பைலட்டைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், நடுக்கடலில் வைத்து இரு தரப்புக்கும் இடையே நேரடி மோதல் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

தென்னிலங்கையில் மாணவர்களுக்கு இடையில் கடும் மோதல் : ஒருவர் மரணம்

Saturday, April 4th, 2026 at 12:37 (SLT)

லுனுகம்வெஹெர – மத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 15 வயதுடைய மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின் போது, 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவனுக்கும், 10ஆம் தரத்தில் பயிலும் 14 வயதுடைய மாணவனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

போர் நிறுத்த முயற்சிகள் தோல்வி: அதிகாரிகளைச் சந்திக்க ஈரான் மறுப்பு

Saturday, April 4th, 2026 at 12:31 (SLT)

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் முன்னெடுத்த தூதரக முயற்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்க ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அமெரிக்காவின் நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று கூறி, ஈரானிய தூதர்கள் இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில். 3A எடுத்து சாதித்த மாணவன் காலமானார்

Saturday, April 4th, 2026 at 12:26 (SLT)

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A  எடுத்த மாணவன் உடல்நல குறைவால் காலமானார். இணுவில் பகுதியை சேர்ந்த , யாழ்.இந்துக்கல்லூரி மாணவனான லவன் அக்சயன் எனும் மாணவனே காலமானார். 

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் சடலத்தின் தலையை துண்டித்து தம்முடன் எடுத்து சென்ற கும்பல்

Saturday, April 4th, 2026 at 12:23 (SLT)

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்து , சடலத்தின் தலையை இனம் தெரியாத கும்பல் ஒன்று அகற்றி சென்றதுடன் , தலையில்லா முண்டத்தை வெளியில் வீசி சென்றுள்ளனர்.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகாலமரணமடைந்திருந்தார்.

மேலும் வாசிக்க >>>

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து : பணி முடித்து வீடு திரும்பிய இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Saturday, April 4th, 2026 at 12:20 (SLT)

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் , தியாகராசா விக்னேஸ்வரன் (வயது 18) மற்றும் ஜெரின் கனிஸ்டன் (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>