இடைக்கால போர் நிறுத்தம் : ஈரான் மற்றும் பாகிஸ்தான் பரஸ்பரம் நன்றி தெரிவிப்பு

Wednesday, April 8th, 2026 at 12:45 (SLT)

இடைக்கால போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகள் சம்மதம் தெரிவித்து உள்ளதால் மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் படிப்படியாக தணிகிறது. போர் நிறுத்த அறிவிப்பு தங்களுக்கு கிடைத்த வெற்றி என ஈரான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அறிவித்து உள்ளார். லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா, இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கள் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

Wednesday, April 8th, 2026 at 12:39 (SLT)

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியில் கள் இறக்கிய புகாரில் விசாரிக்கச் சென்ற போது போலீசாரை தாக்கியதாக மணிகண்டன் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட விவகாரத்தில், 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்றிரவு போராட்டம் நடத்திய நிலையில், எஸ்.ஐ இசக்கி ராஜா உள்பட மூவர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஆலங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் சேட்.

மேலும் வாசிக்க >>>

இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு பிறகு ஈரான் மின் நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

Wednesday, April 8th, 2026 at 7:12 (SLT)

இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒப்புக் கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க அவற்றை சுற்றி மனித சங்கலி அமைக்குமாறு ஈரான் அதிகாரிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு 2 பெண் தலைவர்கள் போட்டி

Wednesday, April 8th, 2026 at 7:07 (SLT)

ஐக்கய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை இந்த மாதம் தொடங்குகின்றது. இந்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட 4 வேட்பாளர்களும் வருகிற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற உள்ள கலந்துரையாடல் அமர்வுகளில் பங்கேற்பதற்கு உள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் கூற்றுப்படி, நிபந்தனைக்குட்பட்ட போர்நிறுத்தத்திற்கான 10 அம்சத் திட்டம்

Wednesday, April 8th, 2026 at 6:52 (SLT)

ஈராக், லெபனான் மற்றும் யேமன் மீதான போரை முழுமையாக நிறுத்துதல் காலவரையின்றி ஈரான் மீதான போரை முழுமையாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துதல்

மேலும் வாசிக்க >>>

டிரம்ப் மிரட்டலுக்குப் பின் ஈரான் பதிலடி : போர் மேகங்களால் அச்சத்தில் மத்திய கிழக்கு

Wednesday, April 8th, 2026 at 6:25 (SLT)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விதித்த 48 மணி நேரக் கெடு இன்றுடன் (ஏப்ரல் 7, 2026) முடிவடைய உள்ள நிலையில், “இன்று இரவு ஒரு நாகரிகமே அழியக்கூடும்” என அவர் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை உலக நாடுகளை உறைய வைத்துள்ளது. இதற்குப் பதிலடியாகப் பேசியுள்ள ஈரானின் முதல் துணை அதிபர் முகமது ரேசா ஆரிஃப், “எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் எங்களது உளவுத்துறை மற்றும் ராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளது; அனைத்துச் சூழல்களையும் (All Scenarios) சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தவறினால் ஈரானின் உள்கட்டமைப்புகளைச் சாம்பலாக்கிவிடுவோம் என்ற டிரம்பின் மிரட்டல் ஒரு “போர்க்குற்றம்” மற்றும் “இனப்படுகொலைக்கானத் தூண்டுதல்” என ஈரான் ஐநா சபையில் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பாகிஸ்தானில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்

Tuesday, April 7th, 2026 at 10:32 (SLT)

மத்திய கிழக்கு போர் பதற்றால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பகுதியளவு பொதுமுடக்கத்தை அறிவித்தது பாகிஸ்தான் அரசு. இதன்படி இன்று முதல் கடைகள், வணிக வளாகங்களை இரவு 8 மணியுடன் மூட வேண்டும், உணவகங்கள், திருமண அரங்குகள் 10 மணிக்கு மேல் செயல்படத் தடை விதிப்பது என பிரதமர் ஷபாஸ் ஷரிஃப் தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு.


நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 6 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி

Tuesday, April 7th, 2026 at 10:26 (SLT)

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அருகே உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது பயங்கர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கோரத் தாக்குதலில் 10 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகள், 2 சிறுவர்கள் என மொத்தம் 6 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் வாசிக்க >>>

அதிபர் டிரம்ப் விதித்த 10 நாள் கெடு முடிந்தது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் மறுப்பு: அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

Tuesday, April 7th, 2026 at 10:15 (SLT)

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போர் மேற்கு ஆசியா முழுவதும் பரவி 38வது நாளாக நேற்றும் நீடித்தது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் 10 நாள் கெடு விதித்தார். இதற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு ஈரானியர்கள் நரக வாழ்க்கையில் தள்ளப்படுவார்கள் என எச்சரித்தார். டிரம்பின் இந்த கெடு இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் கடைசி வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ஒப்புக் கொள்ளவில்லை. இப்போரை நிறுத்த இருதரப்பினரிடமும் மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான், எகிப்து, துருக்கி நாடுகள் இணைந்து 45 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கக் கோரும் வரைவு முன்மொழிவை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப்புக்கு அனுப்பி வைத்தன.

மேலும் வாசிக்க >>>

சவுதி அரேபியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அல் ஜுபைல் தொழில் நகரத்தில் பயங்கர தீ

Tuesday, April 7th, 2026 at 10:11 (SLT)

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் மிகப்பெரிய தொழில் மையமான அல் ஜுபைல் நகரை இலக்கு வைத்து ஈரான் இன்று (ஏப்ரல் 7, 2026) அதிகாலை ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானிலிருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகளைச் சவூதியின் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்த போதிலும், சில ஏவுகணைகள் மற்றும் அதன் பாகங்கள் அல் ஜுபைல் தொழிற்பேட்டைக்குள் விழுந்து வெடித்தன. இதனால் அங்குள்ள பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளில் பிரம்மாண்டமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வான் உயிருக்கு எழும்பும் கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் பல மைல் தூரத்திற்குத் தெரிவதாகச் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் காட்டுகின்றன.

மேலும் வாசிக்க >>>

லண்டன் இரவு விடுதிக்கு வெளியே பயங்கரம்: இளைஞர் குத்திக் கொலை நான்கு பேர் அதிரடி கைது

Tuesday, April 7th, 2026 at 10:05 (SLT)

லண்டனின் பெக்காம் பகுதியில் உள்ள ரூபி தெருவில் அமைந்துள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே, நேற்று (ஏப்ரல் 6, 2026) அதிகாலை 4 மணியளவில் ஒரு கும்பலுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டார். தகவல் அறிந்து வந்த லண்டன் ஆம்புலன்ஸ் சேவையினர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அதே இடத்தில் கத்திக் குத்து காயங்களுடன் கிடந்த 20 வயதுகளில் இருக்கும் மற்ற இரு இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

எரிவாயு விலை அதிகரிப்பு – ஆறு மில்லியன் குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு

Tuesday, April 7th, 2026 at 10:01 (SLT)

எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அப்பல்லோ 13-இன் சாதனையை ஆர்டெமிஸ் II முறியடித்தது

Tuesday, April 7th, 2026 at 9:57 (SLT)

நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டம், பூமியிலிருந்து மனிதர்கள் பயணித்த மிகத் தொலைவான பயணத்திற்கான சாதனையை முறியடித்துள்ளது.
ஓரியன் விண்கலத்தில் இருந்த நான்கு விண்வெளி வீரர்கள், திங்கட்கிழமை அன்று GMT 15:58 மணிக்கு, 400,171 கி.மீ (248,655 மைல்கள்) என்ற முந்தைய சாதனையை முறியடித்தனர். இந்தச் சாதனை 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்பல்லோ 13-ஆல் படைக்கப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் உயர்மட்ட உளவுத்துறை ஜஸ்ட் தலைவர் கொல்லப்பட்டார்

Tuesday, April 7th, 2026 at 9:55 (SLT)

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதிமி, திங்களன்று நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது : சி.வீ.கே.சிவஞானம்

Tuesday, April 7th, 2026 at 9:52 (SLT)

யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது , அதனை புனரமைப்பது தொடர்பாக நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இரு வாரங்களுக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>