வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு பொலிஸ் அதிகாரிகளால் இடையூறுகள் இல்லை : அரசாங்கம்

Thursday, October 9th, 2025 at 10:02 (SLT)

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் தற்போது அரசாங்கத்தில் பதவி வகிப்பதால் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படப் போவதில்லை. காரணம் இவர்கள் கொலையுடன் தொடர்புடையவர்கள் அல்ல என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ரணில் – தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பு – நுவரெலியா உள்ளூராட்சி சபைகள் பற்றி உரையாடல்

Thursday, October 9th, 2025 at 9:56 (SLT)

நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முறைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களை சந்தத்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப் போது சமகால அரசியல் நிலைமைகள் பற்றியும் உரையாடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

Wednesday, October 8th, 2025 at 11:10 (SLT)

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

சிங்கம் வயதானாலும் புல்லைத் தின்னாது, சிங்கம் சிங்கம்தான் என்ற உண்மையை சரத் பொன்சேகா நன்கு புரிந்துகொள்ள வேண்டும் : மனோஜ் கமகே

Wednesday, October 8th, 2025 at 11:07 (SLT)

வசந்த கரன்னாகொட, சவேந்திர சில்வா, கமல் குணரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதோடு, அவர்களுக்கெதிராக தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்ற அப்போதைய இராணுவத்தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கேள்வியெழுப்பினார்.

மேலும் வாசிக்க >>>

அச்சுறுத்தலால் என்னை ஒருபோதும் மௌனிக்கச் செய்ய முடியாது : உதய கம்மன்பில

Wednesday, October 8th, 2025 at 11:01 (SLT)

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க எனக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். குறித்த பதவியை வகிப்பதற்கான அடிப்படை தகுதியைக் கூட பூர்த்தி செய்யாத அவரது அச்சுறுத்தலால் என்னை ஒருபோதும் மௌனிக்கச் செய்ய முடியாது என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மாத்தறையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

Wednesday, October 8th, 2025 at 10:56 (SLT)

மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள வீதித் தடையில் இருந்த பொலிஸார், மோட்டார் வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஹெரோயின் மற்றும் வாள்களுடன் இளைஞன் கைது

Wednesday, October 8th, 2025 at 10:50 (SLT)

யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரிடம் இருந்து மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

டெலிகிராம், வட்ஸ்எப் பயனாளிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Wednesday, October 8th, 2025 at 10:47 (SLT)

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

புதிய கல்விச் சீர்திருத்தத்தால் ஆசிரியர்களுக்கு எந்தவித பாதிப்புமே ஏற்படாது : பிரதமர்

Tuesday, October 7th, 2025 at 12:18 (SLT)

புதிய கல்விச் சீர்திருத்தங்களால் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பட்டறையில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் புதுவித மோசடி பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் செல்ல தயக்கம்

Tuesday, October 7th, 2025 at 12:14 (SLT)

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் வாசிக்க >>>

தொடர்ந்தும் அதிகரிக்கும் தங்க விலை

Tuesday, October 7th, 2025 at 10:59 (SLT)

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

Tuesday, October 7th, 2025 at 10:55 (SLT)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஹூங்கமவில் வீடொன்றில் தம்பதியினர் சடலமாக மீட்பு

Tuesday, October 7th, 2025 at 10:53 (SLT)

ஹூங்கம வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

பணி இடைநீக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் சம்பளம் தொடர்பான தீர்மானம்

Tuesday, October 7th, 2025 at 10:49 (SLT)

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு பாதி சம்பளம் வழங்கவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய பல கொடுப்பனவுகளை வழங்காமல் இருக்கவும் நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Tuesday, October 7th, 2025 at 10:44 (SLT)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (07) நடைபெற உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>