இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்

Monday, October 6th, 2025 at 10:54 (SLT)

இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Monday, October 6th, 2025 at 10:47 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு வந்த வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

அதிக விலைக்கு அரிசி விற்ற 135 கடைகள் மீது வழக்கு

Monday, October 6th, 2025 at 10:42 (SLT)

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்குக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரயிலில் மோதி இரு இளைஞர்கள் பலி

Monday, October 6th, 2025 at 10:40 (SLT)

கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இன்று உலக ஆசிரியர் தினம்

Sunday, October 5th, 2025 at 8:35 (SLT)

மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் சேவையை பாராட்டுதல், அவர்களின் பொறுப்புகளை உணரச்செய்யும் விதமாக ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் ஒக்டோபர், 5ல் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

பணயக்கைதிகள் விடுவிப்பு எதிர்வரும் நாட்களில்?

Sunday, October 5th, 2025 at 8:33 (SLT)

காசாவில் பணயக்கைதிகள் எதிர்வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ள நிலையில், “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவர் என்றும் காசா இராணுவமயமாக்கப்படாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எல்பிட்டியவில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு

Sunday, October 5th, 2025 at 8:30 (SLT)

எல்பிட்டிய, ஓமத்தவில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (05) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பஞ்சிகாவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

Sunday, October 5th, 2025 at 8:28 (SLT)

துப்பாக்கிச் சூட்டை நடத்தி கொலை செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபர் நேற்று (04) மருதானை பொலிஸ் பிரிவில் உள்ள அபேசிங்காராம வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கு வாய்ப்பு

Sunday, October 5th, 2025 at 8:26 (SLT)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வடிகாணில் இருந்து புதிதாகப் பிறந்த சிசு ஒன்று மீட்பு

Saturday, October 4th, 2025 at 9:45 (SLT)

மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

அர்ச்சுனா MP க்கும் தனக்கும் பாரிய அரசியல் வேறுபாடு உள்ளது :அவரது தலைவர் பிரபாகரன் என்னுடைய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

Saturday, October 4th, 2025 at 9:41 (SLT)

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அர்ச்சுனா எம்.பி எதிர்வரும் நாட்களில் மொட்டுக் கட்சியில் இணைய வாய்ப்புகள் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்

Saturday, October 4th, 2025 at 9:38 (SLT)

அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று நேற்று ( 03) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக, இந்த போராட்டம் நேற்று இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரை சந்தித்த கஜேந்திரகுமார்

Saturday, October 4th, 2025 at 9:36 (SLT)

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும் ஆன்மீகத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும் வாசிக்க >>>

காசா போர் நிறுத்த முயற்சி : டிரம்ப் திட்டத்திற்கு ஹமாஸ் நிபந்தனையுடன் ஒப்புதல் 

Saturday, October 4th, 2025 at 9:22 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காசா போர் நிறுத்த ஒப்பந்தத் திட்டத்திற்கு ஹமாஸ் அமைப்பு தனது பதிலை அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளது. இது மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவு : இன்று ஒரு பெரிய நாள் என்றும் தெரிவிப்பு

Saturday, October 4th, 2025 at 9:16 (SLT)

காசா போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான ஹமாஸின் அறிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>