சிறையில் இருந்து வெளியே வந்தவர் சகோதரனுடன் இணைந்து தாக்குதல் : இருவரும் பொலிசாரால் கைது

Monday, September 8th, 2025 at 9:39 (SLT)

வாளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரனுடன் இணைந்து மீண்டும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோதமாக பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது

Monday, September 8th, 2025 at 9:36 (SLT)

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம்

Monday, September 8th, 2025 at 7:52 (SLT)

போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

செம்மணி மனிதப்படுகொலை : புதிய தகவல்கள் வெளிப்படுத்துவேன் – சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி

Monday, September 8th, 2025 at 7:46 (SLT)

செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது

Sunday, September 7th, 2025 at 10:27 (SLT)

இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள உலகக் குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆட்டை திருடி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்ற திருடன் : ஆட்டோவை விட்டு விட்டு ஆட்டுடன் தப்பி ஓட்டம் – மட்டக்களப்பில் சம்பவம்

Sunday, September 7th, 2025 at 10:25 (SLT)

வீதியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடி, வாடகைக்கு வாங்கியிருந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்ற திருடன், ஆட்டோவை நடுவீதியில் விட்டுவிட்டு, ஆட்டுடன் தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

Sunday, September 7th, 2025 at 10:21 (SLT)

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார்

மேலும் வாசிக்க >>>

அரிய வகை பூரண சந்திர கிரகணம் இன்று

Sunday, September 7th, 2025 at 10:18 (SLT)

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.

மேலும் வாசிக்க >>>

மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்

Sunday, September 7th, 2025 at 10:15 (SLT)

தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் நேற்று (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தங்காலை நகர சபைக்கு

Saturday, September 6th, 2025 at 10:28 (SLT)

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூடு

Saturday, September 6th, 2025 at 10:24 (SLT)

இன்று (06) அதிகாலை 1:38 மணியளவில், நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசம்

Saturday, September 6th, 2025 at 5:52 (SLT)

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் சப்பறத் திருவிழா வெள்ளிக்கிழமை (05) இரவு இடம்பெற இருந்த நிலையில், சப்பற திருவிழாவின் போது வெடி கொளுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இறக்கிக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

Saturday, September 6th, 2025 at 5:47 (SLT)

கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.


செம்மணியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல்

Saturday, September 6th, 2025 at 5:43 (SLT)

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செம்மணி வளைவில் நடைபெற உள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரிட்டனின் கென்ட் டச்சஸ் லேடி கேத்தரின் காலமானார்

Saturday, September 6th, 2025 at 5:38 (SLT)

கென்ட் டச்சஸ் லேடி கேத்தரின் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 92 வயது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முதல் உறவினரான இளவரசர் எட்வர்டை மணந்த கென்ட் டச்சஸ், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் ஆவார்.

மேலும் வாசிக்க >>>