மோடி-டிரம்ப் உறவு முடிந்துவிட்டது

Friday, September 5th, 2025 at 10:36 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடிந்துவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் இங்கிலாந்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை – இத்தாலி இடையே அரசியல் கூட்டம்

Friday, September 5th, 2025 at 10:33 (SLT)

இலங்கை – இத்தாலி இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (04) கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி மற்றும் இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

எல்ல பேருந்து விபத்து : ஜீப் சாரதி கைது

Friday, September 5th, 2025 at 10:30 (SLT)

எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் இருந்தவர்களில் பதினைந்து பேர் (6 ஆண்கள் மற்றும் 9 பெண்கள்) இறந்ததாகவும், குழந்தைகள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

பென்டகனின் பெயரை மாற்ற முடிவு ட்ரம்ப்

Friday, September 5th, 2025 at 10:27 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற முடிவு செய்துள்ளார். அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்


எல்ல பேருந்து விபத்தில் இதுவரை 15 பேர் பலி

Friday, September 5th, 2025 at 8:02 (SLT)

எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

எல்ல பேருந்து விபத்தில் 10 பேர் பலி

Friday, September 5th, 2025 at 1:03 (SLT)

எல்ல-வெல்லவாய வீதியில் நேற்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் வாசிக்க >>>

யக்கல காரியாலயம் பலவந்தமாக கைப்பற்றல் கண்டனம் : விமல் வீரவன்ச

Thursday, September 4th, 2025 at 8:03 (SLT)

முன்னிலை சோசலிசக் கட்சியின் யக்கல காரியாலயத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

2025 புலமைப்பரிசில் பரீட்சை மாவட்ட வாரியான வெட்டுப்புள்ளிகள் 

Thursday, September 4th, 2025 at 7:57 (SLT)

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தளத்தில் பார்வையிடவும்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் பொறுப்பதிகாரியென பஸ்ஸில் பணம் கொடுக்காது பயணித்தவர் கைது

Thursday, September 4th, 2025 at 7:53 (SLT)

கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்து, பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரான போலி பொலிஸ் அதிகாரி ஒருவரை புதன்கிழமை (03) மாரகம பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது பற்றி தெரியவருவதாவது:-

மேலும் வாசிக்க >>>

பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு

Wednesday, September 3rd, 2025 at 10:53 (SLT)

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.“ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும்,” என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மெக்ஸிம் பிரிவோட் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரணிலின் உடல் நிலை, ஐதேக மாநாடு ஒத்திவைப்பு : சஜித் அணி இணையும் வாய்ப்பு

Wednesday, September 3rd, 2025 at 10:50 (SLT)

ரணில் விக்கிரமசங்கவின் உடல் நிலை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது வருடாந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தலா அத்துகோரள ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இத்தாலியின் பிரதி அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

Wednesday, September 3rd, 2025 at 10:46 (SLT)

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி இன்று (03) இலங்கை வருகிறார்.இன்று (03) முதல் எதிர்வரும் 05ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.

மேலும் வாசிக்க >>>

ராஜித இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

Wednesday, September 3rd, 2025 at 10:43 (SLT)

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு விழா

Wednesday, September 3rd, 2025 at 10:40 (SLT)

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு விழா தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

மேலும் வாசிக்க >>>

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கு இந்திய அரசியல்வாதிகள் கண்டனம்

Wednesday, September 3rd, 2025 at 10:32 (SLT)

கச்சத்தீவு குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.நேற்று முன்தினம் கச்சத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கச்சத்தீவு இலங்கைக்கு உரியது எனவும், அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் வாசிக்க >>>