இலங்கையை சிங்கபூராக மாற்றுவதாக கூறிக்கொண்டு சித்திரவதை கூடங்களாகவே மாற்றியுள்ளனர் : ஸ்ரீநேசன் MP

Thursday, September 11th, 2025 at 10:50 (SLT)

இலங்கையை சிங்கபூராக மாற்றுவதாக கூறிக்கொண்டு சித்திரவதை கூடங்களாகவே மாற்றியுள்ளனர்.மிருசுவில் கொலைகள் தொடர்பான குற்றத்துடன் தொடர்புடையவரை முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார். அப்படியென்றால் இனவாத ரீதியிலான செயற்பாடுகளே அளவுக்கு அதிகமாக நடந்துள்ளன. இவ்வாறு செய்தவர்களுக்கு உச்சமான சிறப்புரிமைகளுடனான வாழ்க்கையை அமைப்பதில் சமத்துவம்,சம உரிமை இருக்காது. மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புங்கள். அப்போதே நாடு அபிவிருத்தியடையும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயினுடன் கைது

Thursday, September 11th, 2025 at 10:48 (SLT)

யாழ்ப்பாணத்தில் சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (10) கைது செய்யப்பட்டனர்.16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லி கிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

வாகன விபத்துகளில் குழந்தை, மாணவன் உள்ளிட்ட நால்வர் பலி

Wednesday, September 10th, 2025 at 9:16 (SLT)

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை மற்றும் பாடசாலை மாணவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். பேராதனை, உடுகம, கடவத்தை, ராகம மற்றும் மாவதகம பொலிஸ் பிரிவுகளில் நேற்று (09) இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் வாசிக்க >>>

தமிழ் மக்களுக்கான நீதி மறுப்பை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் ஆரம்பித்து வைத்துள்ளார் : இரா. சாணக்கியன்

Wednesday, September 10th, 2025 at 9:12 (SLT)

நாட்டில் இதுவரை காலமும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களினால் தமிழ் மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்துள்ளது. அந்த வகையில் தமிழ் மக்களுக்கான நீதி மறுப்பை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் ஆரம்பித்து வைத்துள்ளார் .மலையக மக்களின் உரிமைகளையும் பறிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆளும் தரப்பில் உள்ள மலையக பிரதிநிதிகள் வெட்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் முயற்சி : நாமல்

Wednesday, September 10th, 2025 at 9:10 (SLT)

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. போதைப்பொருள் வியாபாரிகள்,பாதாள குழுக்கள் ஆகியோரை ராஜபக்ஷர்கள் கட்டுப்படுத்துவதாயின் அரசாங்கம் எதற்கு. அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டுள்ளது. இது ஐஸ் வாரம் என்றே குறிப்பிட வேண்டும்.அரசியல் விசாரணைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் : பிரதமர்

Wednesday, September 10th, 2025 at 9:08 (SLT)

போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவே செயற்படுவோம். போதைப்பொருள் ஒழிப்புக்கு உரிய கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொடர்புடைய தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களை கவனத்திற் கொள்ள போவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கார் கண்டுபிடிப்பு

Wednesday, September 10th, 2025 at 7:59 (SLT)

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்று (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டமூலம் : உயர் நீதிமன்றின் தீர்மானம்

Tuesday, September 9th, 2025 at 10:41 (SLT)

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மரத்தில் கட்டிவைத்து இளைஞர் மீது தாக்குதல் சமூக ஊடகங்களின் வெளியான காணொளியால் உயிரை மாய்த்துகொண்ட சோகம்

Tuesday, September 9th, 2025 at 10:38 (SLT)

தான் கட்டிவைத்து தாக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த குறித்த இளைஞர் நித்திரை கொண்டதால் இறங்க வேண்டிய இடத்தை தவறிட்டு பிரிதொரு இடத்தில் இறங்கியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மனித புதைகுழி விவகாரம் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் : பிரித்தானியா

Tuesday, September 9th, 2025 at 10:34 (SLT)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழில்சாலையை ஆரம்பித்துள்ள அநுர அரசு : சாகர காரியவசம் குற்றச்சாட்டு

Tuesday, September 9th, 2025 at 10:31 (SLT)

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிக்கை சமர்ப்பித்ததா இல்லையா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தலைக்கவசம் அணியாமல் தந்தையுடன் சென்ற மாணவி பலி

Tuesday, September 9th, 2025 at 10:28 (SLT)

புத்தளம் – வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர்தர வணிகப் பிரிவில் பயிலும் மாணவியான ஏ.எம். சமுதி மல்ஷா என்பவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

Tuesday, September 9th, 2025 at 8:26 (SLT)

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசிலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Tuesday, September 9th, 2025 at 8:22 (SLT)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்

Monday, September 8th, 2025 at 9:42 (SLT)

உலகம் முழுவதும் செப்டம்பர் 8 அன்று சர்வதேச எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 52-வது சர்வதேச எழுத்தறிவு தினத்தின் கருத்துருவானது, எழுத்தறிவு மற்றும் திறன் வளர்ச்சி ஆகும்.

மேலும் வாசிக்க >>>