இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

April 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பெப்ரல் அமைப்பு

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விரைவில் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்போம் : யாழில் ஜனாதிபதி

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் : ஜனாதிபதி அநுர அழைப்பு

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் தாயகம் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.மேலும், புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கில் தங்களின் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தாலிபான்கள் மீதான தடையை நீக்கியது ரஷ்யா

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி மீதான தடையை ரஷ்ய உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. அந்நாட்டு சட்டமா அதிபர் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில் நீதிமன்றத்தின் முடிவு எடுக்கப்பட்டது. ரஷ்யா 2003ஆம் ஆண்டு தாலிபான்களை தடை செய்தது, அதை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குளத்தில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி பலி

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த ஒரு குழுவினர் மீது தாக்குதல்

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலுக்குச் சென்று உணவு முன்பதிவு செய்த ஒரு குழுவை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு குறித்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

“சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பம்

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று புனித வெள்ளி

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

விண்ணில் கடவுள் அவர்! மண்ணில் அவதரித்ததால் மானிட மகனானார். பரமபிதா தொடக்கிய மீட்பு திட்டத்தின் முழுமையும் நிறைவும் அவரே! படைப்பில் ஆதி பெற்றோர் இழைத்த பாவத்தின் நீட்சியாக மனுக்குளத்தை சாபமும் பாவமும் கூறுபோட, இறைமகன் தன் புனித குருதி கொண்டு, உயர் தியாகம் செய்து மனுக்குலத்தின் பாவங்களை எல்லாம் கழுவி புனிதம் செய்த நாளே புனித வெள்ளி…

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அஹுங்கல்லவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அஹுங்கல்லவில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் வந்த நபரொருவர் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆட்சியாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்பட வேண்டும்:வஜிர அபேவர்த்தன

April 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த கட்சி அதிகாரத்தை பெற்றாலும் அந்த உள்ளூராட்சி மன்றங்களை பாேஷித்து பாதுகாப்பது ஆளும் அரசாங்கத்தின் உரிமையாகும். ஆட்சியாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொங்கோவில் படகு தீப்பிடித்து கவிழ்ந்து விபத்து : 50 பேர் பலி நூற்றுக்கணக்கானோர் மாயம் 

April 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடமேற்கு கொங்கோவில் படகு ஒன்று தீப்பிடித்து கவிழ்ந்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (15) இரவு கொங்கோ ஆற்றில் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button