அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை : குமார் குணரத்னம்

March 2nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை எனவும் அவர்கள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்:ஜனக்க ராஜகருணா

March 2nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒரு மாதத்துக்கும் அதிகளவில் எரிபாெருட்கள் கைவசம் இருக்கின்றன. அதனால் மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம். அதேநேரம் யாராவது எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக்க ராஜகருணா தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி

March 1st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

டித்வா சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் நாடு முகங்கொடுத்திருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு மேலும் ஒரு மில்லியன் யூரோ (சுமார் 370 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது

March 1st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்கா– இஸ்ரேல் இணைந்து நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா..? நெதன்யாகு வெளியிட்ட தகவலால் அதிகரிக்கும் பதற்றம்

March 1st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார் என்றும், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி பதற்றத்தை அதிகரிக்க செய்திருந்தது. ஆனால், இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி மறுத்துள்ளார். 

AddThis Social Bookmark Button

கொல்லப்பட்டதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கவனம் ஈர்க்கும் அலி காமெனியின் புதிய பதிவு

March 1st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்னெடுத்த தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அலி காமெனியின் டுவிட்டர் பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது : மனோ கணேஷன்

February 28th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும். நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முகத்தில் இந்த நிலக்கரி மோசடி கரியைப் பூசியிருக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்

February 28th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

AddThis Social Bookmark Button

பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தவே சுரேஷ் சலேயை அரசாங்கம் கைது செய்திருக்கிறது : சம்பத் அத்துகோரல

February 28th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தவே சுரேஷ் சலேயை அரசாங்கம் கைது செய்திருக்கிறது. இது யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

February 28th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உச்சக்கட்ட அரசியலில் விஜய்: விவாகரத்து முடிவால் அதிரும் தமிழக வெற்றிக் கழகம்

February 28th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் தீவிரமாகப் பணியாற்றி வரும் வேளையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27 ஆண்டுகளாகத் திரையுலகின் ‘உதாரணத் தம்பதிகளாக’ வாழ்ந்த இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள இந்த முக்கியமான தருணத்தில், இத்தகைய தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல் (personal crisis) அவரது அரசியல் பிம்பத்தைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தென்கொரிய பிரதியமைச்சருடன் வெளியுறவு பிரதியமைச்சர் சந்திப்பு

February 27th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தென் கொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,அந்நாட்டின் வெளிவிவகார பிரதியமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உரித்து தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று

February 27th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹிமிகம (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (27) அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்

February 27th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தகார் நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக நடத்தப்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதில் வழங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

LTTE இயக்கத்தை மீளமைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன்

February 27th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், இலங்கை அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கவும் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான சற்குணம் (என்ற சபேசன்) என்பவருக்கு கேரளா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த அவருக்கு, விசாரணைத் தொடங்க மேலும் தாமதமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொச்சி என்ஐஏ (NIA) சிறப்பு நீதிமன்றம் இவரது ஜாமீன் மனுவை நிராகரித்திருந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சுஷ்ருத் அரவிந்த் தர்மாಧಿಕாரி மற்றும் பி.வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button